Advertisements

காமத்தில் இருந்து கடவுளுக்கு ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு ரொட்டியின் வாடை தெரியும். அதுபோல் தான் காமமும், காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை விட அதிகமாக காமத்தை பற்றியநினைவில் இருப்பார்கள், ஒருநாள் அவர்களால் காமத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்றால், உள்ளே அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் காமம் வெளிவந்துவிடும் அதனாலேயே சதா காமத்தை அடக்குவதை பற்றியும் அதுக்கு எதிராக கருத்துக்களை சொல்லியும், அந்த எண்ணத்தை அழுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறார். வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அதுபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்கமுடியும் — ஓஷோ —

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com