சுஜாதா _ஏன் எதற்கு எப்படி

Advertisements

❤ கேயாஸ் தியரி என்பது என்ன ? விளக்குங்களேன் புரிகிறதா பார்க்கலாம் ? கேயாஸ் என்பது கிரேக்க வார்த்தை! “பெரும் பாழ்” என்று தான் அதற்கு முத்லில் பொருளாக இருந்தது. வெறும் பாழாக இருந்தால் தொந்தரவு இல்லை! அது குழப்பமாகும் போது சிக்கல்! 1975 ல் கணிதவியலாளர் ஜேம்ஸ் யார்க் இந்தப் பதத்தை முதலில் பிரயோகித்த போது “ஒழுங்கான, ஒழுங்கற்ற தன்மை தான் ” கேயாஸ் என்றார். கேயாஸ் தியரி ஒழுங்கற்றது போல் இருக்கும் விஷயங்களில் ஒழுங்கைத் தேடும் இயல்! 1969ல் எட்வர்ட் லோரென்ஸ் என்னும் எம் ஐ டி வானிலை ஆராய்ச்சியாளர் பருவ மாற்றங்களை கம்பியுடரில் அமைத்தார்! கேயாஸ் இங்கு தான் துவங்கியது என்று சொல்லலாம். வானிலை ஒரு நாளைப் போல் ஒரு நாள் இருக்காது! என்றாலும் வருடம் முழுவதும் பார்க்கும் போது மழையோ, புயலோ, வருவதில் ஒரு விதமான ஒழுங்கு இருப்பதை நாமே கவனித்திருக்கிறோம் ! ஐப்பசி மாசம் அடைமழை ஆடி மாசம் வெள்ளம் – காற்று ! மே மாசம் வெயில் டிசம்பரில் குளிர்! அன்றாட வானிலையை நாம் சரியாகக் கணிக்க முடியவில்லையெனினும் வானிலை ஒழுங்கற்ற ஒழுங்கில் தான் இயங்குகிறது. இதை கம்ப்யூட்டர் மூலம் மாடல் அமைத்துச் சொல்வதற்கு பெரிய்ய்ய சூப்பர் கணிப் பொறிகள் தேவைப் பட்டன. லோரன்ஸ் வண்ணத்துப் பூச்சி விளைவு என்று ஒரு சங்கதி சொன்னார். 1970 ல் அவர் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு பிரேசிலில் வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு! டெக்சாஸில் புழுததிச் சுழற்புயலை எழுப்புமா? என்பது அதாவது சின்னச் சின்ன விளைவுகள் ஒத்துழைத்து பெரிய விளைவை ஏற்படுத்துமா? என்பதே அவர் கேள்வி! பொதுவாக இயற்பியல் வேதியல் பொறியியல் சார்ந்த பார்முலாக்களை எல்லாம் லீனியர் என்பார்கள்! மாற்றங்களுக்கும் விளைவுகளுக்கும் நேரான தொடர்பு இருக்கும் !ஒரு காரின் ஆக்சிலரேட்டரை அழுத்த அழுத்த காரின் வேகம் அதிகரிக்கும்! இது லீனியர்! காரின் பீஸ்டன் ரிங்கோ கிலட்சோ தேய்ந்திருந்தால் ஆக்சிலரேட்டரை அழுத்தினால் திணரும்! ” இரு வரேன்” என்னும் இது நான்- லீனியர்! வாழ்வில் பல விஷயங்கள் இவ்வாறு நான்- லீனியர் என்றார் லோரன்ஸ்! உதாரணம் மக்கள் தொகைப் பெருக்கம்! மக்கள் தொகை பெருகப் பெருக பிள்ளை பெறுபவர்கள் அதிகரிக்கும் வேகம் மாறிக்கொண்டே வரும்! அது மாற மாற .. மக்கள் தொகை மேன் மேலும் பேருக்கும் பாரதி பாடிய போது முப்பது முக்கோடி .. நூற்றாண்டின் இறுதியில் நூறு கோடியாக மாறியது ஒரு நான்- லீனியர் சமன்பாட்டால் தான் இவை பல விதத்திலும் நம் வாழ்வில் குறுக்கிடுகின்றன! பருத்தி விலையிலிருந்து இன்போசிஸ் பங்கின் விலை வரை எல்லாமே நான் – லீனியர்! சதாம் உசேன் மேல் புஷ் படையெடுத்தால் மயிலாப்பூர் தண்ணீர்ததுறை மார்கெட்டில் தக்காளி விலை அதிகமாகுமே … இதுவும் ஒரு நான் லீனியர் சமன்பாடு தான்! -கேயாஸ் தியரிப்படி! எப்படி என்று சொல்லலாமா? சதாம் உசேன் மேல் அமெரிக்கா படையெடுத்தால் கச்சா எண்னை விலை அதிகமாகும். க். எண்னை விலை அதிகரித்தால் பெட்ரோல் விலை அதிகரிக்கும்! இதிலிருந்து லாரி ரேட்டுகள் அதிகமாகும்! இதிலிருந்து லாரி மூலம் சென்னைக்கு வரும் தக்காளி விலை ! கேயாஸ்! உங்கள் வாழ்வின் திருப்புமுனை சம்பவங்களும் கேயாஸ் தியரிப்படி தான் இயங்குகின்றன! அன்று ஆட்டோ பிடிக்காமல் பஸ் பிடித்துப் போயிருந்தால், உங்களுக்கு இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்குமா? அன்று அந்த போன் கால் வராமலிருந்தால் ? அந்தக் கடித்தத்தைக் கிழித்துப் போட்டிருந்தால் … பதில் போடாமலிருந்தால் ? அந்த வார்த்தையை வாய் தவறிச் சொல்லாமலிருந்தால் ? இவை போன்ற தற்செயலான விஷயங்களின் நீண்ட நாள் விளைவுகள் அனைத்தும் கேயாஸ் தான் ! நான் இதை வைத்துக் கொண்டு ஒரு நாவலே எழுதியுள்ளேன் ( விருப்பமில்லத் திருப்பங்கள்) ( ) ❤

You may also like...

Leave a Reply