[:en]பரவி வரும் டெங்கு தத்தளிக்கும் தமிழகம் – ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஒவ்வொரு ஆண்டும் பருவ சுழற்சி காலங்களில் பல்வேறு நோய் கிருமிகளால் பல்வேறு சுற்றுப்புறச் சீர்கேடுகளால் தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதில் இன்றைய காலக்கட்டம் டெங்கு காய்ச்சல். பல்லாயிறக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்புற  நோயளிகளாக இதுவரை 13,000 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை அணுகி உள்ளதாகவும் அரசு தரப்பு ஆவணங்கள் கூறுகின்றன.

இதில் பல நுறு மக்கள் சிகிச்சை பலனின்றி உயிர் துறந்துள்ளனர் என்பதும் செய்தி. ஆனால் அரசாங்கமோ போதிய விழிப்புணர்வும், கால்வாய்களை ஒழுங்குபடுத்ததாதும், குப்பைகளை வாரி செல்லாததும் தான் நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர வேறு எதையும் செய்ததாக தெரியவில்லை என்று  மக்கள் புலம்புவது கேட்கிறது. அவர்களுக்கு அவர்கள் ஆட்சியே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு வைத்தியம் தேடி மத்திய அரசை நாடி, ஒடி அலைவதே வேலையாக இருக்கும் போது, மக்களின்  டெங்கு பிரச்னை எங்கே பார்க்கப்போகிறார்கள்.

தகுதியற்ற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும் என்பதை இந்த மக்கள் புரிந்து கொண்டால் புதிய ஆட்சி மாற்றத்திற்கு  வழி ஏற்படும். இல்லேயேல் இப்படியான தரங்கெட்ட அரசியலை தேர்ந்தெடுத்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  மக்கள் இவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

டெங்கு பாதிப்பை மாநில சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வேண்டும் என்று பாமக கூறியுள்ளது. நிலைமை கட்டுக்கடாங்காமல் போய் உள்ளதை அரசே  ஒத்துக் கொள்கிறது. ஒன்றுக்கும் உதவாத அரசை நம்பி வீணாக போவதைக் காட்டிலும், மக்களை தாங்களை தங்கள் பிரச்னை தீர்த்துக் கொள்ள ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்.

சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்காது பார்த்துக்  கொள்ள வேண்டும். மழைநீர் வடிந்து செல்ல கால்வாய்களை அமைக்க வேண்டும். டெங்கு பாதித்தவர்களை உடன் மருத்துவமனைக்கு  கொண்டு செல்ல உதவ வேண்டும். இதில் எல்லா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,  அமைப்புகள்,  அரசியல் கட்சிகள் என்று பாகுபாடு காட்டாமல் இது ஒரு அவசர நிலையாக கருதி பணி செய்ய வேண்டும். வெள்ளத்தில் மக்கள் ஒருகிணைந்ததைப் போல் டெங்குவிலும் மக்கள் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும். ஜல்லி கட்டு, நீட், கதிராமங்கலத்தில் கூடியதுபோல் ஒரு ஒற்றுமையை நாம் டெங்கு எதிராகவும் போராட வேண்டும்.

ஆட்சியில்  உள்ளவர்களை  நம்பி வீண் போக வேண்டாம். அவர்களுக்கு பதில் சொல்லும் நாளில் மறக்கமால் உங்கள் பதிலைச்  சொல்லுங்கள். இப்போது அவர்களை மறந்து விடுவோம். மக்கள் நாம் பணி செய்வோம். டெங்குவை ஒழிக்க போர்கால நடவடிக்கையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். டெங்கு மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வழிகளை செய்வோம்.

 

அடிப்படையில் கொசுக்களால் இந்த டெங்கு காய்ச்சல் பரவுவதால் வீட்டில் கொசுக்கள் வராது தடுக்க  வேண்டும். அப்படி வந்தாலும் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள, கொசு விரட்டிகளையும், அதற்கான ஆயிண்மெண்ட்களையும் வாங்கி தற்காலிகமாக உபயோகித்துக் கொள்ளுங்கள்.  கொசு வலையினை பயன்படுத்துங்கள்.  வீட்டையும், வீட்டை சுத்தம் சுகாதராமாக வைத்துக்  கொள்ளுங்கள். எங்கும் எதிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வரும் முன் காப்போம் என்பதின் படி  முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள்  தேவை.

உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்தி கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு தயார் ஆக வேண்டும். இல்லையேல் கிடைக்கும் பத்து இருபது ஓட்டு  கூட  கிடைக்காத நிலைதான் ஏற்படும்.  அம்மா பேரை சொல்லி ஆட்சி நடத்தும் அதிமுக இனி என்ன சொல்லி மக்களை சந்திக்கப் போகிறது என்பது தெரியவில்லை. மக்களுக்கு வேண்டியதை செய்யாமல் மக்களை சந்தித்தால் மக்கள் பதில் சொல்வார்கள் அவர்கள் பாணியில்.

 [:]

You may also like...

Leave a Reply