[14-Jul-2022 15:35:47 UTC] PHP Fatal error: Uncaught Error: Call to undefined function site_url() in /home2/thiru/public_html/wp-content/plugins/wp-file-upload/lib/wfu_constants.php:15 Stack trace: #0 {main} thrown in /home2/thiru/public_html/wp-content/plugins/wp-file-upload/lib/wfu_constants.php on line 15 [14-Jul-2022 15:36:22 UTC] PHP Fatal error: Uncaught Error: Class 'WP_Widget' not found in /home2/thiru/public_html/wp-content/plugins/wp-file-upload/lib/wfu_widget.php:3 Stack trace: #0 {main} thrown in /home2/thiru/public_html/wp-content/plugins/wp-file-upload/lib/wfu_widget.php on line 3 Thiruvalluvan Online News [:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:] - THIRUVALLUVAN

[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]

Advertisements

[:en]

விண்வெளி,ஆராய்ச்சி,அமைச்சர்,ஹர்ஷ வர்த்தன்,பெருமிதம்

சென்னை: ”நம் நாட்டின், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பார்த்து, அறிவியல் உலகமே வியக்கிறது,” என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.

சென்னை, அண்ணா பல்கலையில், ஐந்து நாட்கள் நடைபெறும், இந்திய சர்வதேச அறிவியல் விழா, நேற்று துவங்கியது. விழாவை துவக்கி வைத்து, மத்திய அமைச்சர், ஹர்ஷ வர்த்தன் பேசியதாவது:

வரும், 2022க்குள், நம் நாட்டில், அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் கனவு. அவரின் கனவை நனவாக்குவதன் முன்னோடியாக, மூன்றாவது ஆண்டாக, இந்திய சர்வதேச அறிவியல் கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சி நடத்துவதற்கு முன், உலக பட்டியலில் இடம் பெறாமல் இருந்த, இந்திய கல்வி நிறுவனங்கள், முதல், 100 மற்றும், 75 நிறுவனங்கள்பட்டியலில், இருஆண்டுகளாக இடம் பெற்றுள்ளன; அந்த அளவுக்கு முன்னேற்றம் உள்ளது.

நம் தொழில்நுட்பங்களை, உலக நாடுகள் கவனிக்கின்றன. குறிப்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சியை பார்த்து, அறிவியல் உலகமே வியக்கிறது. வளர்ந்த நாடுகளும், தங்களின் செயற்கைக்கோள்களை, இங்கிருந்து ஏவுகின்றன. அது போல், மற்ற துறைகளிலும், நாம் வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வங்கதேச நாட்டின், அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ஈபீஸ் ஓஸ்மர் பேசுகையில், ”ஆபத்தில், உண்மை நண்பனை அறியலாம் என்பதை போல, 1971ல், எங்கள் நாடு உருவான போது, இந்தியா உதவியது. அது போல, இந்தியாவுடன் கைகோர்த்து, அறிவியல் ரீதியாகவும் வளர விரும்புகிறோம்,” என்றார்.

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் பேசுகையில், ”நம் மூதாதையர், பசுஞ்சாணம், கோமியம், மஞ்சள், வேப்பிலை உள்ளிட்ட எளிய பொருட்களை, கிருமி நாசினியாகவும், நோய் தடுப்பு பொருட்களாகவும் பயன்படுத்தினர். அதே போல, சாதாரண மக்களும் பயன்படுத்தும்படி கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்,” என்றார்

[:]

You may also like...

Leave a Reply