200 ரூபா நோட்டு

Advertisements

இந்தியாவே திரும்பிப்பார்க்கச் செய்த 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் எது தெரியுமா? நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்ததிலிருந்தே, புதிய இந்தியா பிறக்கவுள்ளதாக கூறி பல அதிரடி திட்டங்களை அவசரமாக கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர். அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 8, 2016 இல் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, பின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிகக்கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக, 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டையும், 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் விண்கலம் படமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், 200 ரூபாய் நோட்டில் இருக்கும் படம் எதனுடையது என்று பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம். அதுகுறித்து பார்க்கலாம் வாருங்கள். 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபிகள் ஆகும். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. மேலும், பழமை விரும்பிகளும், வரலாற்று ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் சுற்றுலாத் தளமாகும். 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம்! 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபிகள் ஆகும். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. மேலும், பழமை விரும்பிகளும், வரலாற்று ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் சுற்றுலாத் தளமாகும். இந்த ஸ்தூபிகள் மற்றும் குவிமாடங்கள் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி இந்த ஸ்தூப மாடத்தில் உள்ள ஆதார தூணை நிறுவினார். அசோகர் தூண் இந்த ஸ்தூபிகள் மற்றும் குவிமாடங்கள் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி இந்த ஸ்தூப மாடத்தில் உள்ள ஆதார தூணை நிறுவினார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உறைவிடமாக சஞ்சி விளங்கி வருகிறது. புத்த சமய பண்பாட்டின் நுழைவாயில்! மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உறைவிடமாக சஞ்சி விளங்கி வருகிறது. சஞ்சியில் ஏராளமான புத்த ஸ்துபாக்கள், புனிதத் தளங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் புத்த நினைவுத் தூண்களைக் காணலாம். சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களில், புத்த சமய கல்வெட்டுகள், பண்பாட்டு சிறப்புகள் மற்றும் புத்த சமய புராணங்கள் போன்றவற்றைப் பார்க்க முடியும். இதனால் பழமை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். ஆர்ப்பரிக்கும் சுற்றுலாத் தளம் சஞ்சியில் ஏராளமான புத்த ஸ்துபாக்கள், புனிதத் தளங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் புத்த நினைவுத் தூண்களைக் காணலாம். சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களில், புத்த சமய கல்வெட்டுகள், பண்பாட்டு சிறப்புகள் மற்றும் புத்த சமய புராணங்கள் போன்றவற்றைப் பார்க்க முடியும். இதனால் பழமை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். சஞ்சியில் ஏராளமான புத்த சமய நினைவிடங்கள் அமைந்திருப்பதால், புத்த பெருமான் அவர்கள் சஞ்சியில் நெடுங்காலம் தங்கி இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் நினைக்கலாம். சஞ்சியின் வரலாற்று சிறப்பு! சஞ்சியில் ஏராளமான புத்த சமய நினைவிடங்கள் அமைந்திருப்பதால், புத்த பெருமான் அவர்கள் சஞ்சியில் நெடுங்காலம் தங்கி இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் நினைக்கலாம். ஆனால் புத்தர் தன் வாழ்நாளில் ஒரு பொழுதுகூட இந்த சஞ்சிக்கு வருகை தரவில்லை. பிற புத்த சமய மையங்களைவிட சஞ்சி கிராமத்தில் நிலவும் அமைதியான சூழல், புத்த பெருமானின் உடனிருப்பை பயணிகள் அனுபவிக்க மிகவும் உதவி செய்யும். வந்ததே இல்லை ஆனால் புத்தர் தன் வாழ்நாளில் ஒரு பொழுதுகூட இந்த சஞ்சிக்கு வருகை தரவில்லை. பிற புத்த சமய மையங்களைவிட சஞ்சி கிராமத்தில் நிலவும் அமைதியான சூழல், புத்த பெருமானின் உடனிருப்பை பயணிகள் அனுபவிக்க மிகவும் உதவி செய்யும். பண்டைய காலத்தில் சஞ்சி, விதிஷாகிரிக்கு பிரிசித்தி பெற்று இருந்தது. அதாவது பணக்கார வணிகர்களின் மையமாக சஞ்சி விளங்கி வந்தது. தற்போதும் இந்த பணக்கார வணிகர்கள் சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களுக்கு தங்களுடைய பொருளுதவிகளை வழங்கி வருகின்றனர். விதிஷாகிரி பண்டைய காலத்தில் சஞ்சி, விதிஷாகிரிக்கு பிரிசித்தி பெற்று இருந்தது. அதாவது பணக்கார வணிகர்களின் மையமாக சஞ்சி விளங்கி வந்தது. தற்போதும் இந்த பணக்கார வணிகர்கள் சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களுக்கு தங்களுடைய பொருளுதவிகளை வழங்கி வருகின்றனர். அதோடு சஞ்சி ஒரு அழகிய பெண்மனியான தேவி என்வரின் உண்மையான காதலை எடுத்துச் சொல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது. அதாவது தேவி என்ற அழகான பெண்மனி, புத்தரின் தீவிர பக்தை ஆவார். பேரரசரான அசோகர் இந்த பேரழகியான தேவி மீது தீராத காதல் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த காதலைப் பயன்படுத்தி சாஞ்சியில் ஏராளமான புத்த நினைவிடங்களை எழுப்புமாறு, அசோகரை தேவி ஊக்கப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. காதல் கோட்டை அதோடு சஞ்சி ஒரு அழகிய பெண்மனியான தேவி என்வரின் உண்மையான காதலை எடுத்துச் சொல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது. அதாவது தேவி என்ற அழகான பெண்மனி, புத்தரின் தீவிர பக்தை ஆவார். பேரரசரான அசோகர் இந்த பேரழகியான தேவி மீது தீராத காதல் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த காதலைப் பயன்படுத்தி சாஞ்சியில் ஏராளமான புத்த நினைவிடங்களை எழுப்புமாறு, அசோகரை தேவி ஊக்கப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. கிபி 1818-ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஹீனயான புத்த சமயத்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற புத்த மையத்தை தோண்டி கண்டுபிடித்தனர். சஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துபிகள் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் உள்ள புத்த சமய தளங்களில் சஞ்சி மிகவும் முக்கிய ஒன்றாக இருக்கிறது என்று நம்பலாம். மண்ணுக்குள் இருந்த புத்தர் கிபி 1818-ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஹீனயான புத்த சமயத்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற புத்த மையத்தை தோண்டி கண்டுபிடித்தனர். சஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துபிகள் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் உள்ள புத்த சமய தளங்களில் சஞ்சி மிகவும் முக்கிய ஒன்றாக இருக்கிறது என்று நம்பலாம். சஞ்சி பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புத்த சமய விகாரா, சஞ்சி ஸ்துபியின் நானகு நுழை வாயில்கள், சஞ்சி அருங்காட்சியகம், மிகப் பெரிய கிண்ணம், குப்த ஆலயம், அசோகத் தூண் மற்றும் சஞ்சி ஸ்துபி போன்றவை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும். ஆன்மீகத் தளங்களைத் தவிர்த்து சஞ்சியின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் மிக அழகாக ரசிக்க முடியும். சஞ்சியைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் சஞ்சி பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புத்த சமய விகாரா, சஞ்சி ஸ்துபியின் நானகு நுழை வாயில்கள், சஞ்சி அருங்காட்சியகம், மிகப் பெரிய கிண்ணம், குப்த ஆலயம், அசோகத் தூண் மற்றும் சஞ்சி ஸ்துபி போன்றவை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும். ஆன்மீகத் தளங்களைத் தவிர்த்து சஞ்சியின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் மிக அழகாக ரசிக்க முடியும். சஞ்சிக்கு மிக அருமையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சஞ்சிக்கு அருகில் உள்ள போபாலில் ராஜா போஜ் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு டில்லி, மும்பை, ஜபல்பூர், இந்தூர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்ஸிகளை எடுத்துக் கொண்டு சஞ்சியை மிக எளிதாக அடையலாம். சஞ்சிக்கு எவ்வாறு செல்வது? சஞ்சிக்கு மிக அருமையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சஞ்சிக்கு அருகில் உள்ள போபாலில் ராஜா போஜ் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு டில்லி, மும்பை, ஜபல்பூர், இந்தூர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்ஸிகளை எடுத்துக் கொண்டு சஞ்சியை மிக எளிதாக அடையலாம். போபாலில் மிகப் பெரிய ரயில் நிலையமும் அமையப்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தினமும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் போபாலில் மிகப் பெரிய ரயில் நிலையமும் அமையப்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தினமும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் சஞ்சியில் புத்த சமய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சஞ்சிக்கு செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆகும். சஞ்சி செல்ல தகுந்த காலம் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் சஞ்சியில் புத்த சமய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சஞ்சிக்கு செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆகும். சஞ்சியில் அமைந்திருக்கும் சஞ்சி ஸ்துபா ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இந்த ஸ்துபா போபாலிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மொத்தம் 3 சஞ்சி ஸ்துபாக்கள் உள்ளன. இந்த ஸ்துபாக்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சஞ்சி ஸ்துபா சஞ்சியில் அமைந்திருக்கும் சஞ்சி ஸ்துபா ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இந்த ஸ்துபா போபாலிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மொத்தம் 3 சஞ்சி ஸ்துபாக்கள் உள்ளன. இந்த ஸ்துபாக்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

You may also like...

Leave a Reply