திப்பு சுல்தான் பிறந்தநாள்

Advertisements

திப்புசுல்தான் பிறந்தநாள் விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம்: மத்திய மந்திரி கடிதத்தால் சர்ச்சை பதிவு: அக்டோபர் 22, 2017 04:52 அ-அ+ திப்புசுல்தான் பிறந்தநாள் விழா தொடர்பான அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்: திப்புசுல்தான் பிறந்தநாள் விழா தொடர்பான அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தென்னிந்தியாவில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியவர் திப்புசுல்தான். இவரது பிறந்ததினமான நவம்பர் 10-ம் தேதியை ஆண்டுதோறும் கர்நாடக அரசு திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகிறது. அரசு சார்பில் திப்புசுல்தான் பிறந்ததின விழாவைக் கொண்டாடக் கூடாது என பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் கர்நாடக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள திப்புசுல்தான் பிறந்ததின விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நவம்பர் 10-ம் தேதி நடக்க இருக்கும் திப்புசுல்தான் பிறந்ததினம் தொடர்பான விழாவிற்கு என்னை அழைக்க வேண்டாம். மேலும், விழா அழைப்பிதழில் எனது பெயரை சேர்க்க வேண்டாம், திப்புசுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர் என குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் இந்த கடிதம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com