உலகிலேயே மிகப் பெரிய அற்புதம்

Advertisements

உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் என்ன என்று … ஒரு ஜென் மாஸ்டரிடம் கேட்டார்கள் … அதற்கு அவர் .. ” நான் இங்கு என்னுடன் தனித்து அமர்ந்தவாறு இருக்கிறேன் ” என்பதுதான் என்று பதிலளித்தார் … இந்த உலகில் யாருமே தனித்திருக்க விரும்புவதில்லை … தனித்திருத்தலே மிகப் பெரிய அற்புதம் … தனித்திருத்தலில் நீங்கள் அப்படியே … உங்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள் … தனித்திருத்தல் (alone) தனிவிடப்படல்(lonely) இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு … தனிவிடப்படலில் நீங்கள் மற்றவருக்காக ஏங்குகிறீர்கள் … உங்களுடன் உங்கள் மனைவியோ கணவரோ நண்பரோ … அப்பாவோ அம்மாவோ யாராவது கூடவே … இருந்தால் நல்லது என்று ஏங்குகிறீர்கள் … மற்றவர் உங்களுடன் இருந்தால் ஒன்றாக இருக்கும் நன்றாக இருக்கும் … ஆனால் மற்றவர் உங்களுடன் இல்லை … மற்றவர் இல்லாத நிலைதான் தனிவிடப்பட்ட நிலை … ஆனால் தனித்திருத்தல் உங்கள் பிரசன்னமாகும் … இந்த அகண்டம் முழவதையுமே நிரப்பி விடுமளவுக்கு … நீங்கள் உங்கள் பிரசன்னத்தால் நிரப்பப் பட்டுள்ளீர்கள் … இதில் மற்றவர் யாரும் துணையிருக்கத் தேவையில்லை … இதை உணர முயற்சி செய்யுங்கள் … ஒரு பொழுதேனும் சற்றே தனித்திருந்து பாருங்கள் … வெறுமனே சும்மா உட்கார்ந்து இருங்கள் .. தனித்து உட்கார்ந்து இருங்கள் இதுவே தியானம் … ஓஷோ

You may also like...

Leave a Reply