கலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்

Advertisements

கலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள். . நீ உண்மையில் கண்களைத் திறந்து பார்ப்பாயானால் எல்லா உருவத்திலும் உன் உருவத்தையே பார்ப்பாய்! காதுகளைத் திறந்து வைத்து மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பாயானால், எல்லாக் குரல்களிலும் உன் குரலையே கேட்பாய்! . மேகத்தின் மீது நாம் அமர்ந்துகொண்டு பார்த்தால் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்குமிடையே எல்லைக்கோடு தெரியாது…! ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்குமிடையில் கல்லைப் பாரக்க முடியாது… ஆனால், மேகத்தின் மீது ஏறி அமர முடியாதது நமது துரதிஷ்டம்…! . அவர்கள்… என்னை வாழ்நாளை சரியாக விற்பனை செய்யாத பைத்தியம் என நினைக்கிறார்கள். என் வாழ்நாளுக்கு விலை மதிப்பு உள்ளது என நினைக்கும் அவர்களை நான் பைத்தியக்காரர்கள் என நினைக்கிறேன்…!

You may also like...

Leave a Reply