[:en]எனது ஆன்மிகம் – 2. ஆர்.கே.[:]

Advertisements

[:en]

உலகை மதம் ஆட்சி செய்கிறது என்று சொன்னால் மிகையாகாது.  எல்லா ஜனநாயக நாடுகளும் மதத்தின் பிடியில்தான் உள்ளன. மேற்கத்திய நாடுகள் கிருத்துவத்தின் பிடியிலும், இந்தியா ஹிந்துகளின் பிடியிலும், அரபு நாடுகள் இஸ்லாத்தின் பிடியிலும், தெற்காசிய நாடுகள் பௌதத்தின் பிடியிலும் உள்ளன.  உங்களை மதமற்றவன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உங்கள் ஆதி மூலம் ஏதோ ஒரு மதமாகத்தான் இருக்கும்.

நான் ஏன் இதைச் சொல்லிக்  கொண்டிருக்கிறேன், இவன் ஒரு மதவாதிபோல, நம்மிடம் மதத்தின் கருத்துக்களை திணிக்க நினைக்கிறானோ  என்று  நீங்கள் எண்ணிவிட வேண்டாம். யாரும் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன் நான். அதே நேரம் எல்லா கருத்துக்களுக்கும் இடமளித்து நல்லதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம்.

எந்த ஒரு விஷயத்திலும், கோட்பாடுளிலும், கொள்கையிலும் இருவேறு விஷயங்கள் இருக்கவே செய்யும். இது இயற்கை, நன்மையாலும், தீமையாலும் நிரப்பப்பட்டதே உலகம். இதில் கருத்துக்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல. நீங்கள் உங்களுக்கு ஏற்புடையதை கைக்கொள்ளுங்கள். அதற்கு நீங்களே பொறுப்பாளி ஆவீர்கள். அதில் நான் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம். அதில் நான்  உணர்ந்த நல்லது, தீயதை எடுத்துச் சொல்லாம். ஆனால் அதுதான் இறுதி உண்மை என்று நான் உங்களிடம் வலியுறுத்தும் கடப்பாடு எனக்கில்லை. ஒரு வழிகாட்டியாக மட்டுமே உள்ளேன் என்ற புரிதலுடன் உங்களுடன் பேசுகிறேன்.

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். மதம் எவ்வாறு வருகின்றது என்பதை பார்ப்போம். மதம் கடவுள் என்ற  கோட்பாட்டின் ஆதாரத்தில் கட்டப்படுகிறது. கடவுளை நாம், பெற்றோர் வழியே முதலில் அறிந்து கொள்கிறோம். அது அறியா பருவம். தாய், தந்தையே நமது முதல் கடவுள், அவர்கள் சொல்வதே நமது வேதமாக இருக்கிறது. இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். அடிப்படை இதுதான். தாய் தந்தையர் தான் அவர்கள் சார்ந்த மத கடவுள்களை நமக்கு அறிமுகம் செய்விக்கிறார்கள். சரி அவர்களுக்கு  யார்  சொன்னது? அவர்கள் பெற்றோர். அவர்களுக்கு, அவர்கள்  பெற்றார் என்று வழி வழியாக பல தலைமுறைகள் செல்லாலாம். சில தலைமுறைகளில் கடவுள் வழிமுறைகளே மாறலாம். ஏதோ சில தலைமுறை அரச நிர்பந்ததத்திலோ அல்லது  சுய விருப்பத்திலோ தங்கள் நிலைப்பாட்டை, கடவுளை, மதத்தை மாற்றியிருக்கலாம். ஆனால் கடவுள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.  சரி இறுதியாக கடவுள் எங்கிருந்து வந்தார் என்றால் மதகுருமார் மூலமாக வந்தார் என்று அறிவோம் அல்லது ரிஷிகள், வேதங்கள் அருளியது என்பார்கள்.

ஆக கடவுள் ஒரு போதும் ஒரு மனிதனாக அவதரித்து நான் தான் கடவுள் என்று கூறவில்லை என்று அறிகிறோம். ஏதோ ஒரு குருமார் அவர் நமது வேதகால ரிஷியோ, இயேசுவோ, நபியோ என்றும் கடவுள் அவர்கள் மூலமாக பேசுகிறார் என்றும் அறிகிறோம். ஏன் கடவுள் நேரடியாக வந்து பேச வரவில்லை. வந்தால் என்ன நடக்கும், இவற்றை நாம் பின்னால் பார்க்கலாம்.

ஆக கடவுள் நம்மிடம் ஏதோ ஒரு மனிதர்கள் மூலமாக வந்துள்ளார் என்பதை அறிகிறோம். அந்த மனிதர்கள் மூலமாக, அவர்கள் பின்பற்றும் மனித  கூட்டத்தை நாம் மதவழிகூட்டம்  என்கிறோம். மதம் என்ற சொல்லுக்கு வேர்ச் சொல் மத் என்ற சமஸ்கிரத சொல்லில் இருந்து வருகின்றது. மன்மத், ஈஸ்வரிய மத் என்பார்கள். அப்படியென்றால் மனதின் வழி, ஈஸ்வரினின் வழி என்று அர்த்தம்.

தொடரும்……[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com