[:en]எனது ஆன்மிகம் – 7 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

அந்த வட்ட விளம்பின் வெளியே  உள்ள பரவெளி உங்கள்  அகக்காட்சிக்கு காண கிடைக்காது. அந்த சுதந்திரவெளியை நீங்கள் காண மாட்டீர்கள். பரவெளி தரிசனம்  என்று ஒன்று உண்டு. அதை  தரிசிக்க முடியாது போகும். அது  சடங்காக உள்ளதை நீங்கள் சிதம்பரம் கோவிலில் பார்க்கலாம். சிதம்பர இரகசியம் என்று காட்டுவார்கள். அது ஒரு ஓட்டை வழியாகப்  பார்த்தால் ஒரு வெட்டவெளி தெரியும். அதைப்பார்ப்பதால் என்ன நிகழ்ந்துவிட போகிறது. அது எதையோ சுட்டிக் காட்டுகிறது அவ்வளவே. இப்படியாக ஒவ்வொரு மதங்களும் அந்த உண்மையை சுட்டிக் காட்டும் சடங்குகளை வைத்துள்ளன. அன்பு மிகுந்து வரவில்லை என்றால் அது வட்டத்தை சுற்றும் போக்காக மாறிப்போகும்.

அன்பு மட்டுமே போதுமா என்றால் போதாது. உள சுத்தி வேண்டும். அப்படியென்றால் உள்ளத்தில் து£ய்மை வேண்டும். யார் குறித்தும் பொல்லாங்கு சொல்லாத, குறை சொல்லாத,  குற்றம் கடியாத, வெறுப்பு இல்லாத மனம்  வேண்டும். இந்த நிலை உங்கள் அன்பின் நிலை பெருக்கத்திற்கு பேருதவி புரியும். எல்லோரையும் நேசிக்கும் மனத்தால் தான் இறைவனை நெருங்க முடியும்.

உள்ளத்தில் உண்மை வேண்டும். நடத்தையில், வார்த்தையில் உண்மை இருக்க வேண்டும். பொய்மை, கயமை, பகைமை பாராட்டாத மனம் வேண்டும். சத்யமேவ ஜெயதே. அரிசந்திரனின் உண்மை நிலை வேண்டும். என்னங்க நீங்க ரொம்ப கஷ்டமா சொல்றீங்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இந்த காலத்திலா? உண்மையாவா? என்று கேட்பது புரிகிறது. உண்மையில் உண்மையாக இருப்பதுபோல் எளிய, சுலபமான, கஷ்டமில்லாத வழி எதுவும் இல்லை.

நீங்கள் அடைய நினைக்கும் கடவுள் சத்தியம், சிவம், சுந்தரம் என்று சுட்டப்படுகிறார். இது அவரின் குணங்களாக காட்டப்படுகிறது. ஆக உண்மையின் மூலமாகத்தான் அவரை நீங்கள் அடையாளம் காண முடியும். கடவுள் உங்களை ஒவ்வொரு நிமிடமும் உங்களை சந்திக்கிறார். நீங்கள்தான் அவரை பார்க்கும் நிலையில் இல்லை என்று கூறுகிறார்கள். காரணம் நமது பொய்மை, கயமை, பகைமை அவரை திரையாக மறைத்து நிற்கிறது. இதை மாயை என்று ஹிந்து தத்துவமும்,  சைத்தான் என்று மற்ற மதங்களும் கூறுகின்றன,

ஆக உண்மையாக இருப்பது என்பது உங்கள் இயல்பான ஒன்றுதான். ஆனால் எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் மாயையாக உங்கள் உண்மைத்தன்மையை மறைத்து நிற்கின்றன. சத்தியமாக இருந்தால் கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சத்தியமாக இருக்க ஆசை எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். என்ன சார் ஆசை இல்லாமல் எப்படி இருப்பது. நாங்கள்  என்ன சன்னியாசம் போறதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆசையில்லாமல் இருப்பது என்பதை, எப்படி நீங்கள்  புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் விருப்பங்கள்  சுப விருப்பங்களாக இருக்கலாம். சுய விருப்பங்களாக இருக்க  கூடாது. சுய மற்றும் சுப விருப்பங்களுக்கு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் உள்ளது. சுய விருப்பங்கள் உங்கள்  ஆழ்மனதின் எதிர்மறை எண்ணங்களில் வருவது. ஆனால் சுப விருப்பங்கள் உங்கள் நேர்மறை எண்ணங்களில் இருந்து வருவது.

சுய விருப்பங்கள் சுப விருப்பங்களாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.  அது தான் தனது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து வருவது. அது உங்களை தவறுதலாக வழிநடத்தக் கூடும்.

 

தொடரும்……[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com