[:en]எனது ஆன்மிகம் – 9  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஆனால் சில வேளைகளில் உங்கள் மனம் சும்மா இருப்பதை உணர்வீர்கள். அதில் ஒரு சுகம்  இருக்கும். இதைத்தான் சும்மா இருத்தல் என்கிறார்கள். இந்த நிலைதான் சிவம் என்று சொல்லப்படுகிறது. செயலில் செயலற்ற தன்மை. மனதை கடந்த நிலையில் எண்ணங்களற்ற சக்தி நிலையில் உங்கள் செயல்கள் இருப்பது. இது சிலவேளைகளில் எல்லோரிடமும் நடக்கக் கூடிய விஷயம்தான். ஆனால் இதன் அடிப்படையை நாம் புரிந்து கொண்டு அதில் நாம் வளர்ச்சி அடைவது இல்லை.

அடுத்ததாக சுந்தரம். நீங்கள சத்தியமாகவும், சிவமாகவும் இருப்பீர்களேயானால் அடுத்ததாக சுந்தரமாகத்தான் இருப்பீர்கள். இவைகள் எல்லாம் அடுத்த அடுத்த நிலையாக ஏற்படுவது. உங்கள் உடலும், உள்ளமும் ஒரு வசீகரத்தன்மையை பெற்றுவிடும். நீங்கள் நு£று பெறிலும் தனித்துத் தென்படுவீர்கள். ஒரு மாபெரும் ஈர்க்கும் ஆற்றலை பெறுவீர்கள். ஒரு இனம் புரியாத மணம் உங்களை சூழ்ந்து இருக்கும். அதை மற்றவர்களை ஆகர்சிக்கும்.

இந்நிலையை பெறும் போது உங்களுக்குள் ஒரு அழியாத ஆனந்தம் ஏற்படும். உங்கள் மனது, புத்தி, செயல்கள் அனைத்தும் ஒரு ஒழுங்கில், அதாவது ஒரு தன் ஒழுங்கில் செயல்படும்.  ஆங்கிலத்தில் சொல்வதனால் ஒரு ரிதமில் செயல்படும். ஒரே அலைவரிசையில் செயல்படுவது. மனம் ஒன்றாக, செயல் ஒன்றாக, புத்தி ஒன்றாக என்ற பிரிதல் நிலை இல்லாமல் ஒரு ஒருகிணைப்பு நிகழும்.

அப்போது கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்பது உங்கள் கேள்வியாக இருக்காது. நீங்கள் கடவுளோடு இருப்பீர்கள் என்று  சொல்லலாம் அல்லது கடவுளை எண்ணாது நீங்கள் நீங்களா இருப்பீர்கள் என்று சொல்லலாம்.

ஆக பக்திக்கு ஆதாரம் அன்பு, அந்த அன்புக்கு ஆதாரம் உண்மை. உள து£ய்மை. இந்நிலையை நீங்கள் பெற்றிருந்தால் நீங்கள் கடவுளோடுதான் இருக்கிறீர்கள். ஆக தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அதற்கு பக்தி உதவுகிறது. பக்தியின் வழியில் அதை எளிதாக பெறலாம். அதில் உள்ள சடங்குகள், ஆச்சாரங்கள், விழாக்கள் எல்லாம் அதற்கு ஒரு வழியாகத்தான் இருக்கின்றன.

ஆனால் நாம் அடிப்படை மூலத்தை விட்டுவிட்டு, நுனிபுல் மேய்வதை போல் சடங்குகள், ஆச்சாரத்திலேயே முழ்கி செக்குமாடாக உலா வருகிறோம். மூலத்தை உணர புறப்பட்டவர்கள் அதை அடைந்தே முடித்தார்கள். வரலாற்றிலும் இடம் பெற்றார்கள்.

சரி கடவுளை அடைய பக்தி மட்டும்தான் வழியாக உள்ளதா வேறு வழிகள் இல்லையா? என்னால் அன்பின் வழியில் பயணிக்க முடியவில்லை என்றால் கடவுளை உணர முடியாதா? வேறு வழிகள் இல்லையா என்று கேட்பது புரிகிறது. உண்மையை உணர எண்ணிறந்த வழிகள் உள்ளன. இதுதான் இறுதியா னது, உறுதியானது என்று அவரரவர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வழிகளே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் புதிது புதிதாக தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. ஏன் அந்த முயற்சியில் நீங்கள் கூட ஒரு வழியே நாளை சொல்ல முயற்சிக்கலாம். அது  யாரோக்கோ எப்படியோ உபயோகப்படலாம்.

தொடரும்……[:]

You may also like...

Leave a Reply