[:en]எனது ஆன்மிகம் – 12 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

அது முதல் அவர் மொழியில் எளிய நடையில் உண்மை குறித்து ஏராளமான உபதேசங்களை, வழிகளை தன்னை சந்திக்கும் மக்களுக்கு கொடுக்கிறார். நான் அவரின் 1000 உபதேச மொழிகள்  என்ற புத்தகத்தை படித்துள்ளேன். அதில் அவர் கூறும் ஒவ்வொரு உபதேச மொழிகளும், எளிமையானவை, உண்மையானவை யாரும் மறுத்துரைக்க முடியாதவை.

எளிய குட்டிக்கதைகள் மூலமாக விளக்கிச் சொல்வது அவருக்கு இயல்பாக வந்தது. அவர் ஒரு படித்த பண்டிதர் அல்ல. அறிஞர் அல்ல.  ஆனால் அத்தனை கதைகளை அவர் சொல்லியுள்ளார். அந்த ஞானம் அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

கடவுளைத் தேடி அலையும் ஒரு இளைஞனாக சுவாமி விவேகானந்தர் அவரைச் சந்திக்க வருகிறார். அவரது உண்யான பெயர் நரேந்திரன் என்பதாகும். மிகச் சிறந்த அறிவாளியான நரேந்திரன் கடவுளே இல்லை என்று சொல்லி வரும் நாத்திகராக இருக்கிறார்.  அப்படியானவருக்கு பரமஹம்சர் பற்றி  தெரிய வருகிறது. கடவுள் கொள்கையால் பல கேள்விகளால் துளைக்கப்பட்ட நரேந்திரன் பரமஹம்சரை சந்திக்கிறார்.

அவர் கேட்ட  முதல் கேள்வி கடவுளை எனக்கு நீங்கள் காட்ட  முடியுமா? என்பதே. அருள் நிறைந்த சிரித்த முகத்துடன் கண்டிப்பாக மகனே என்று சொல்லி தனது பாதத்தை எடுத்து அவரின் நெஞ்சில் வைக்கிறார். கால் பட்டவுடன் அவரின் மனதின் செயல்பாடுகள் ஒடுங்கி பிரபஞ்ச பேரண்டத்தின் சக்தியோடு இணைகிறது. காட்சிகள் மறைகின்றன. மயங்கிவிடுகிறார் நரேந்திரன். பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த நரேந்திரனுக்கு பல விஷயங்கள் புரிகின்றன. இவரே தனக்கு வழி காட்ட முடியும் என்று நம்புகிறார். அவரின் சீடராக மாறுகிறார். அதன் பின்பு அவ்வாசிரமத்தின் முக்கிய பொறுப்புக்கு பரமஹம்சர் காலத்திற்கு பிறகு பொறுப்பேற்கிறார்.

அமெரிக்க  நகரமான சிக்காகோவில் நடந்த உலக மதங்களின் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று இந்து மதத்தின் உயர் தத்துவங்களின் உண்மையை உலகறிய செய்கிறார். அவரின் சிக்காகோ உரை உலக பிரசித்தி அடைகிறது. அமெரிக்காவில் பல வருடங்கள் தங்கி அம்மக்களுக்கு வேதாந்த கருத்துக்களை உரைக்கிக்கிறார்.

பரமஹம்சரின் உபதேச மொழிகள் பலரின் வாழ்க்கையில் சிறந்த திருப்பங்களை, வழிகாட்டுதலை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வகையில் சிலகாலம் நான் ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தில் உள்ள சந்நியாசிகளிடம் தொடர்பில், மடங்களுக்கு சென்று வந்ததன் மூலம் அறிந்து கொண்டேன் விஷயம் என்னவென்றால் அவர்கள் சிறந்த தியாக வாழ்க்கையை இந்த மனித குலத்திற்காக வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் வாழ்க்கையை அவர்கள் பிறருக்காக வாழ்ந்து வருவதும், அதன் மூலம் இறைத்தேடுதலை நடத்தலும், அன்பின் வழியாக, தியானத்தின் வழியாக அவர்கள், உபதேசத்தின் வழியாக அவர்கள் தங்கள் ஆன்மிக சாதனைகளை செய்து வருவதை அறிந்து கொள்ள முடிந்தது.

நான் மதுரையில் இருந்தபோது சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் விவேகானந்தர் ஆஸ்ரமத்திற்கு சென்று வந்துள்ளேன். அங்கு உள்ள ஒழுங்கு நிலை என்னை வசீகரித்தது. சாதுக்கள் தம்தம் பணிகளை ஒழுங்கே செய்து, உறக்கத்தில் கூட தியான உணர்வுநிலையில் இருப்பதை அறிய முடிந்தது.

மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனி என்கின்ற பகுதியில் இராமகிருஷ்ணருக்கான ஆலயம் உள்ளது. அது ஒரு தனியார் கட்டுப்பாட்டில் இராமகிருஷ்ணருக்காக அமைக்கபட்ட ஆலயம். அங்கு கல்கத்தாவில் இருந்து ஒரு சாது வந்து  ஆலயத்தில் நடைபெற வேண்டிய பூஜைகளை செய்து வந்தார். அங்கு தினம்தோறும் வழிபாடுகளும், வாரந்தோறும் கூட்டங்களும் நடைபெறுவது உண்டு. அதில் நானும் பங்கேற்று வந்துள்ளேன். அது சமயம் அந்த சாதுவிடம் கல்கத்தாவில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆஸ்ரமத்தில் அவரின் அனுபவங்களை கேட்டு வருவதுண்டு. எனக்கு அவர் ஆன்மிகத்தில் ஒரு துண்டுதலாக இருந்தார்.

 

தொடரும்…

 [:]

You may also like...

Leave a Reply