[:en]எனது ஆன்மிகம் – 13 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

அதே சமயம் மதுரை அய்யர் பங்களாவில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆஸ்ரமம் இருந்தது. இவர்  அங்கு அடிக்கடி செல்லும் போது,  என்னையும் கூட்டிச் செல்வார்.  அங்குள்ள சாதுக்களிடம் அறிமுகம் செய்து வைப்பார். அங்கும் சில வேளைகள் நான் செல்வதுண்டு. இதற்கிடையே சென்னை தினகரன் பத்திரிக்கையில் வேலை கிடைத்து நான் மதுரையில் இருந்து கிளம்பும் வேளையில் எனக்கு சென்னை புதிய அறிமுகம். அங்கு எனக்கு யாரையும் தெரியாது. இதை தெரிந்து கொண்ட அந்த கல்கத்தா சாமி எனக்கு மதுரை ஆஸ்ரமத்தில் சென்னை ஆஸ்ரமத்தில் ஒரு வாரம் தங்க அனுமதி கடிதம் வாங்கித் தந்தார். அவரின் உதவியை இத்தருணத்தில் நான் நினைவு கூற வேண்டும் என்று விரும்பினேன்.

தினகரன் நாளிதழின் இணையபிரிவில் ஆன்மிக பக்கத்திற்கு பொறுப்பாசிரியராக பணியாற்றிய போது, சென்னை ராயப்பேட்டை ஹைரோட், மைலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆஸ்ரமத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு.

அது   சமயம் மடத்தின் தலைவர் திரு.சுவாமி.கௌதமானந்தரை சந்தித்து சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளை இணையத்தில் மக்களுக்காக அறிய செய்ய  2000 ஆண்டில் கேட்ட போது, அவர் மிக்க மகிழ்ச்சியுடன்  அதற்கு அனுமதியளித்து அதற்கு வேண்டிய புத்தகங்கள், புகைப்படங்களை வழங்க உத்தரவிட்டார். அது இணையத்தில் வெளியாகி ஆயிரக்கணக்கான ஆன்மிக அன்பர்கள் பயன்பெற வழி செய்தது. அதேபோல் அவரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் விவரங்களை தினகரன் ஆன்மிக பக்கத்தில் வெளியிட்டு, வெளிநாட்டு அன்பர்கள் அவரைச் சந்திக்கும்படி செய்த நிகழ்வுகளும், சுவாமி.கௌதமானந்தரின் நேர்காணல்களும் இடம் பெற்றன.

இப்படியாக சுவாமி பரமஹம்சருக்காக, சுவாமி விவேகானந்தருக்காக இந்த எளியவனின் இயன்ற சேவையை செய்யும் வாய்ப்புக்காக மகிழ்ச்சியடைந்தேன். நான் 2000 ஆண்டில் அங்கு செனறு வந்தபோது, புதிய ஆலையம் ஒன்று மிகுந்த பொருட்செலவில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்காக கட்டப்பட்டு வந்தது.  அது இன்று ஆயிரக்கணக்கான மக்களின் ஆன்மிக சாதனைகளுக்கு பயன்பட்டு வருகிறது.

என்னளவில் உண்மையான மனதுடன் உலகளாவிய அளவில் மக்களுக்காக தொண்டாற்றி, இறை வழிகாட்டும் அமைப்புகளில் முதன்மையானதாக ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் ஆஸ்ரமங்களைச் சொல்வேன். கிட்டத்தட்ட நு£றாண்டுகளுக்கு மேல்  இப்பணியை செய்து வருகிறார்கள். லட்சோப லட்சம் மக்கள் இதன் தொடர்பில் ஏதேனும் சிறு பயனை, அது உள்முகமாகவோ அல்லது வெளிமுகமாகவோ அல்லது வாழ்வதாரமாக பெற்று பயனடைந்துள்ளனர்.

 

தொடரும்…[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com