[:en]எனது ஆன்மிகம் – 19 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஆனால் கற்றுக் கொண்டவர்களை, அதை அப்பியாசம் செய்பவர்களை கண்டுள்ளேன். உண்மையில் அவர்கள் எவ்வளவு சக்தியை பெறுகிறார்கள் என்பதை நீங்கள் நேரடியாக பார்த்தால்தான் புரிந்து கொள்வீர்கள்.

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். நாங்கள் ஆன்மிக நண்பர்கள் கோடை விடுமுறை காலத்தில் 4 நாட்கள் ஐந்து நாட்கள் புத்து£ர் அருகே உள்ள ஒரு மலையடிவாரத்தில் உள்ள குகையில் தியானப் பயிற்சியை மேற்கொள்வோம். அது ஒரு அழகான மலை மூன்று பக்கம் மலை, ஒரு பக்கம் வழி.  புத்து£ர் அருகே கோபாலகிருஷ்ணபுரம் என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து 7 கிலோமீட்டர் நடைபயணமாக  செல்ல வேண்டும். மலையடிவாரத்தில் ஒரு ஆஷ்ரமம் உள்ளது. ஒரு சுவாமி அங்கு தங்கி தன்னுடைய தவ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அந்த ஆஸ்ரமத்தின் அருகில் வள்ளலார் சபைக்கு சொந்தமான ஒரு குகை உள்ளது ஆன்மிக சாதனைகளை செய்வதற்காக. என்னை அழைத்துச் சென்ற நண்பர்கள் அங்கு பல முறை சென்று வந்தவர்கள் என்பதால்,  எங்களுக்கு  தங்குவற்கு மற்றும் உணவு வசதி அங்குள்ள  சுவாமியால் செய்து தரப்பட்டது.

அங்கு தங்கியுள்ள அந்த சுவாமியால் மலையில் ஒரு அழகிய கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அஷ்ரமத்திற்கு அருகில் ஒரு பாறையால் ஆன நீச்சல் குளம் ஒன்றை அந்த சுவாமி அமைத்துள்ளார். மலையில் இருந்து அருவியாக ஓடி வரும் தண்ணீர் அந்த நீச்சல் குளத்தில் விழுந்து அதை நிரப்பி வெளியே ஓடுகிறது.

நாங்கள் பகல் பொழுதில் அந்த நீச்சல் குளத்தில் பல முறை குளித்துவிட்டு, எங்கள் சாதகங்களை செய்ய ஆரம்பிப்போம். எங்களுக்கான உணவு தயார்  செய்து தந்து  விடுவார்கள். ஆக நான்கு நாட்கள் நல்ல ஒரு அனுபவமாக அது இருந்தது.

இவ்வாஷ்ரத்தை அடைய ஐந்து கிலோ மீட்டர் நடக்க  வேண்டும். அது சமயம் எங்களோடு ஒரு முதியவர் வந்தார்.  சிறந்த முனிவர் தோற்றத்துடன் காட்சியளிக்கும் அவர்  மிகவும் சுறுசுறுப்பானவராக இருந்தார். ஏப்ரல் மாத உச்சி வெயிலில் மிகவும் கஷ்டப்பட்டு அந்த ஐந்து கிலோ மீட்டரை கடக்கிறோம். அது சமயம்  அந்தப் பெரியவர் எங்களுக்கு  முன்பாக ஒரு கிலோ மீட்டர்  முன்னே செல்ல நாங்கள் பின்தங்கி நடந்து வருகிறோம். நாங்கள் அவரிலும் இளையவர்கள்.  அவர் 85 வயது ஆகும் முதியவர். அவரிடம்  எந்த தளர்ச்சியு¢ம்  இல்லை. அவரின் மகன் எங்களோடு வருகிறார் அவர் வயது 55. அவர் இங்கிருந்து சப்தம் போடுகிறார். அப்பா மெதுவாக போ. தனியாக காட்டில் போகாதே புலி இருப்பதாக சொல்கிறார் என்று எச்சரிக்கை செய்கிறார். எங்களுக்கோ ஆச்சரியம் இத்தனை வேகமாக எப்படி அவரால் நடக்க முடிகின்றது என்று.

நான் ஆஷ்ரமம் சென்று அடைந்தபின், இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது அவர் வாசியோகத்தை 30 வருடங்களாக பயிற்சி செய்து வருவதாக சொன்னார். அப்போதுதான் வாசியோகத்தின் அற்புதத்தை நான் நேரடியாக உணர்ந்து கொண்டேன்.

 

தொடரும்       முந்தயபகுதி

 [:]

You may also like...

Leave a Reply