ரஜினி அரசியல் வருகை எப்படி இருக்கும்?  –  ஆர்.கே,

Advertisements

[:en]

வரும் ஆனா வராது என்ற என்னத்த கன்னையா காமெடிக்கு இணையாக பேசப்பட்ட ரஜினி அரசியல் வருகைக்கான அறிவிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது இன்று.

தனது அரசியல் அறிவிப்பு குறித்து டிசம்பர் 31 அறிவிப்பதாக கூறி இருந்த நடிகர் ரஜினிகாந்த், இராகவேந்ததிர கல்யாண மண்டபத்தில் தனது இரசிகர்கள் மத்தியில் தனது அரசியல் அறிவிப்பை அறிவித்தார்.

விரைவில் வர  இருக்கும்  உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நாட்கள் குறைவாக இருப்பதால் போட்டி இல்லை என்றும், வர இருக்கும் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் தனது கட்சி போட்டியிடும் என்றும் 234 நான்கு சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுவோம் என்றும், அதற்குள் கட்சியை பலப்படுத்தும் வேலையை தொண்டர்கள் தீவிரமாக செய்ய வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்.

ரஜினி தனது அரசியல் வருகைக்கான காரணமாக சொல்வது சிஸ்டம் கெட்டுவிட்டது என்பது மட்டுமே. அதை சரி செய்ய மக்களுக்கு சேவை செய்யப்  போவதாக அறிவித்துள்ளார்.

ரஜினியின் இவ் அறிவிப்பு  அரசியல் கட்சி தலைவர்களிடையே பல்வேறு கருத்துகளையும், விமர்சனங்களையும் உண்டாக்கியுள்ளது. அனைவரும்  அவர் அரசியல் பிரவேஷத்தை வரவேற்றாலும். அவரின் பங்களிப்பு பல்வேறு தமிழகத்தின் பிரச்னைகளில் பூஜ்யமாகவே இருந்துள்ளது என்றும். அவரை மக்கள் எந்தளவுக்கு ஆதரிக்க போகிறார்கள்  என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும்  கருத்துக் கூறியுள்ளார்கள்.

பொதுவாக இரசிகர்களை வைத்து அரசியல் களத்திற்கு வந்த நடிகர்கள் ஒரு சிலரைத் தவிர மக்கள் பலருக்கும்  தங்கள் ஆதரவை மறுத்தே வந்துள்ளனர். காரணம் மக்களின் பிரச்னைக்கு குரல் கொடுக்காமல், மக்கள் போரட்டங்களில் பங்கேற்காமல் நேரடியாக நான் மக்களுக்கு சேவை செய்ய வருகிறேன் என்பது, பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது. சினிமா வாழ்க்கை முடிவை எட்டுவதால், அரசியல் பிரவேஷமா? என்று பலரும் கேட்கிறார்கள்.  இதுவரை சம்பாதிக்க வேண்டியதையெல்லாம் சம்பாதித்துவிட்டு, இப்போது சேவை என்பதை எப்படி நம்ப முடியும் என்று கேட்கிறார்கள்.

ரஜினிகாந்த் மனைவியின் தொடர் பிரச்னைகளை மக்கள் பார்த்து வருகின்றனர். அவர்களின்  நியாயமற்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்டித்துள்ளது. நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.  இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காத ரஜினிகாந்த் என்ன மக்கள் சேவை செய்யப் போகிறார். களங்கிய அரசியல் குட்டையை மேலும் ஒருவர் கலக்க வருகிறார்களா? என்று மக்கள் கேட்கின்றனர்.

கட்சியின் பெயர் என்ன? கட்சியின் கொடி என்ன? கட்சியின் கொள்கை என்ன? எதுவும் தெரியவில்லை. ஆனால் அரசியல் பிரவேஷம் அறிவிப்பு வெளியிட்டாகிவிட்டது. முறையான எந்த ஏற்பாடுகளையும் செய்து கொள்ளாமல் அரசியல்  அறிவிப்பு  என்பது. இவராகட்டும், நடிகர் கமலஹாசனாட்டும், இவர்களை பின்புலமாக மத்திய பாஜக இயக்குகிறதோ என்று பலரும் தங்கள் ஐயத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

நடந்து  முடிந்த  ஆர்.கே. நகர்   இடைத்தேர்தல்  பாஜகவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருத்தப்பட்டதால், அதை சரிகட்ட  வெள்ளைத்  தாமரை  பின்னணியில் ரஜினியை களம் காண அனுப்புகிறார்களோ என்று பலரும் கேட்கின்றனர்.

அரசியலுக்கு யாரும் வரலாம். வரட்டும்  என்று தமிழர்கள் பெருந்தன்மையாக வரவேற்பதுதான். தமிழர்கள் தலையில் தமிழர்களைக் கொண்டே மிளகாய் அரைப்பது, வேற்று மாநிலத்தில் இருந்து பிழைப்பு நடத்த வருபவர்களுக்கு  கொள்கை, கேட்பாடு, அரசியலாக உள்ளது. இதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும்  என்ற உறுதிப்பாட்டுடன் புதிய தமிழகத்தை கட்டமைக்கவில்லை என்றால், ஒருபோதும் ஆயலாரால் மீட்சி இல்லை என்பதை  தமிழ்  மக்கள்  உணர்ந்து கொள்ள வேண்டும்.

 [:de]

[:]

You may also like...

Leave a Reply