[:en]போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் அரசு மெத்தனம் காரணமா? —  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

தமிழ்நாட்டு மக்கள் எதாவது ஒரு பிரச்னையில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கும் காலமாக உள்ளது, தற்போதைய அதிமுக அரசில். காரணம் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்ததால் பொதுமக்கள் சொல்லண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். போதிய பேருந்துகள் இல்லாது, அன்றாடம் பொதுப்போக்குவரத்தை நம்பி வாழும் ஏழை, எளிய, நடுத்தர வர்கத்தின் பாடு பெரும்பாடாக உள்ளது.

என்னதான் பிரச்னை இந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு? 13 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஊதிய வரன்முறையில் திருப்தியில் என்று பேச்சுவார்தையை முறித்துக் கொண்டன முக்கிய தொழிற்சங்கங்களான தெ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கள். அங்கிகரீக்கப்பட்ட  இத்தொழிற்சங்கத்திலேயே 80 சதவீத பணியாளர்கள் இருப்பதால் முற்றிலுமாக தமிழ்நாடு பொது போக்குவரத்து இல்லாமல்  ஸ்தம்பித்துள்ளது.

அரசு ஒட்டுனருக்கு இணையான சம்பளம் கோரி பல கட்ட பேச்சுவார்த்தைக்கும் பிறகும் உடன்பாடு எட்டப்படாதது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சேர வேண்டிய பணப்பயன் எதுவும் முறையாக வழங்கப்படாதது. 7000 கோடிக்கும் அதிகமான தொகை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட தொகையை அரசு  ஊழியர்களுக்கு  பணப்பயனாக  வழங்காதது என்று பல்வேறு பிரச்னைகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேச்சுவார்தை நடத்தியும் பயன் இல்லாது, தங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன தொழிற்சங்கங்கள்.

ஊழியர் சங்கங்கள் கேட்கும் சம்பள உயர்வு தொகைக்கும், அரசு வழங்குவதாக சொல்லும் சம்பள உயர்வுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றாலும். ஊழிய சங்கங்கள் ஏற்கனவே பேச்சுவாத்தையில் ஒத்துக்கொண்ட ஊதிய உயர்வைத்தான் கேட்கிறோம்.  இப்போது நிதி பற்றாக்குறை என்று கூறி ஒத்துக் கொண்ட ஊதிய உயர்வை மறுப்பது நம்பிக்கை துரோகமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.

சென்ற பேச்சுவார்த்தையின் போது அரசு பரிவுடன் அனைத்து கோரிக்கைளையும் ஏற்றுக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லா கோரிக்கைகளையும் தீர்த்து வைப்பதாக கூறியதாலும், நீதிமன்றம் கூறிய தீர்ப்பின் அடிப்படையிலும் சென்றய வேலைநிறுத்தத்தை தாங்கள் வாபஸ் வாங்கியதாகவும், தற்போது தாங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றும் தொழிற்சங்கள் கூறியுள்ளன.

நிலைமை இப்படியிருக்க, மதுரை ஹைகோர்ட் கிளையில் வேலைநிறுத்தத்தை சட்ட விரோதமாக அறிவிக்ககோரிய பொதுநல மனுவை ஏற்க இருவர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மறுத்துவிட்டது.  அதே நேரம் சென்னை தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வேலைநிறுத்தத்தை வாபஸ் வாங்கவிட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறது. அதிக சம்பளம் வேண்டும் என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்கிறார்கள். ஒரு கண்ணில் வெண்ணைய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பார்களே அதுதான் இதா? மொத்தத்தில் அரசுக்கும், அரசு போக்கு வரத்து ஊழியர்களுக்கும் இடையில் பொதுமக்கள் படும்பாடு என்ன சொல்வது.  ஆளத் தெரியாதவர்கள் ஆட்சியில் நித்தம் ஒரு அலங்கோலம்  என்பதாக  போய்க் கொண்டிருக்கிறது.

ஊழிய சங்கங்களும் அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வை பெற்றுக் கொண்டு, எதிர் காலத்தில் நிறைவேறாத தங்கள் கோரிக்கைகளுக்காக போராடுவதே முறையாக இருக்கும். இப்படி மக்களை வருத்துவதில் இருவருக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து, அரசும், ஊழிய சங்கங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

[:]

You may also like...

Leave a Reply