​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது!இதன் தாத்பர்யம் என்ன?

Advertisements

இதை சரியாக புரிந்து கொள்ள நாம் வெகு தூரம் நமது பார்வையை பின்னோக்கித் திருப்ப வேண்டும்!
Big Bang தியரியிலிருந்து இதற்கான விளக்கத்தைப் பெற முயல்வோம்!
Big Bang
எதுவுமற்றதிலிருந்தே ‘பொருள்கள்’ தோன்ற ஆரம்பித்தன என கூறுகிறது.
அத்வைதமோ
அது எதுவுமற்றதல்ல என்றும் அது ‘ஆன்மா’ என்கிறது.
விஞஞானத்தின் கண்களுக்கு எதுவுமற்றதாக அது தோன்ற என்ன காரணம்?
அவ் ஆன்மா ‘நிர்குணமாக’ இருப்பதே ஆகும்!
அறிவியல்,ஒன்றை அடையாளம் காண்பதற்கு அது ஏதாவது ஒரு வகையில் ‘தட்டுப் படுவதாக’ இருக்க வேண்டும்.
ஏதாவது ஒன்று தட்டுப்பட வேண்டுமென்றால் அந்த பொருளுக்கு நிறை Mass இருக்க வேண்டும். இப்படிப் பட்ட பொருளைத்தான் ‘பருப்பொருள்’ என்கிறோம்!
இன்னொரு விதமாக
குணம் என்ற வகையில் ‘சக்தி’ யானது விஞ்ஞானத்தின் கண்களில் அகப்பட்டுக் கொள்கிறது.
நியூட்ரினோக்கள், போட்டான்கள்-ஔி, மின்காந்த அலைகள், மின்சாரம் போனறவைகள் தங்களிடமிருக்கும் 
பாசிட்டிவ், நெகட்டிவ் மற்றும் நடுநிலை எனும் குணங்களால் விஞ்ஞானத்தால் அடையாளம் காணப்பட்டு வகைபடுத்தப் பட்டுவிடுகின்றன.
ஆனால் ஆன்மாவோ
குணமற்றது, நிறை mass அற்றது.
எனவே விஞ்ஞானம் இதை அங்கீகரிக்கவில்லை. மேலும்
விஞ்ஞானம், தகவல் எனும் அறிவின் கீழ் மாத்திரமே உயிர்வாழும்.
இந்திய மெஞ்ஞானமோ
ஆன்மாவின் இருப்பை சுத்தமாகக் கணித்து அதன் துல்லியமான அனுபவத்தைப் பெறுகிறது.
ஆன்மாவிலிருந்தே முதல் பருப்பொருள் Matter தோன்றியது. 
ஆனால் இன்னும் குணம் தோன்றவில்லை.
மேட்டர் தோன்றியவுடன் இயற்கை என்பது தோற்றத்திற்கு வந்தது. 
இயற்கையோ எப்போதும் தராசு போல் சமநிலையை விரும்புவது.
எனவே matter க்கு anti-matter உடனே உருவானது.
இப்போதுதான் குணம் என்ற ஒன்று இந்த மேட்டர் மற்றும் ஆன்டிமேட்டரால் வழக்கத்திற்கு வந்தது.
ஆக
ஆன்மாவின் முதல் ‘பிறப்பு’ என்பது இதுதான்!
இனி
இத்தகைய மேட்டர் ஆன்டி மேட்டர் படைப்புகள் பல்கிப் பெருகி
நட்சத்தரமாகி, கோள்களாகி, கல் மண் நீராகி கடைசியில் மனிதன் வரையில் வந்திருக்கின்றது.
இன்னும் ஆன்மாவானது இந்த மாதிரி மாறி மாறி பிறப்பெடுப்பதை நிறுத்த வில்லை.
இனி 
ஒரு பிறத்தலின் மரணம் எனபதோ
ஒரு பருப்பொருள் வேறு ஒன்றுடன் சேரும் போதோ அல்லது பிரியும் போதோ
தன்னுடைய நிறையில் மாற்றமாகி விடுகிறது.
இப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமடையும் போது அதற்கு முந்தயை வடிவம் மரணமடைந்ததாகக் கருதப்படுகிறது.
உதாரணமாக
ஒரு ஹைட்ரஜன் இன்னொரு ஹைட்ரஜனுடன் பிணைந்து ஹீலியம் ஆகிறது.
அப்படி ஆகும் போது ஹைட்ரஜன் என்ற நாமமும் ரூபமும் அழிவதால் அந்த ஹைட்ரஜன் இறந்ததாகவும், ஹீலியம் பிறந்ததாகவும் கருதப் படுகிறது.
இதுவே பிறப்பு மற்றும் இறப்பின் விளக்கமாகும்.
ஆன்மா இங்ஙனமாக
பிறப்பதையும், மரணமடைவதையுமே
ஆன்மா மாறி மாறி பிறந்து மடிவதாக நாம் கருத ஏதுவாக இருப்பதாக இந்திய வேதாந்தம் பறைசாற்றுகிறது.
ௐ நம சிவாய போற்றி ௐ!You may also like...

Leave a Reply