[:en]எனது ஆன்மிகம் – 42 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

இப்படியாக 10 தினங்களும் பயிற்சி வகுப்புகள் சென்றன. முதல் 3 நாட்கள் மூச்சுப் பயிற்சி. அதில் நீங்கள் உங்கள் உள்வாங்கும், வெளிச் செல்லும் மூச்சை மட்டும் பார்க்க வேண்டும். அதில் உணரப்படும் மகிழ்ச்சி மற்றும் சக்தியை நீங்கள் உங்கள் அளவில் உணர்வீர்கள். காலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து  மூச்சை கவனிக்கும் பயிற்ச்சி மட்டுமே.

அடுத்த இரண்டு நாள் உங்கள் உடலில் ஏற்படும் உணர்வுகளை கவனிக்க வேண்டும். மூன்று நாள் பயிற்சிக்குப் பிறகு உடலில் ஆங்காங்கே உறுத்தல் நிழ்கவுகள் இருக்கும். அது குறித்து அவர்கள் சொல்லும் போது நாம் செய்யும் வினைப்பயன்கள் நம் சூட்ஷம உடலின் பகுதியில் தங்குவதாகவும்,  அந்த வினைப்பயன்களின் விளைவுகளே உறுத்தலாக உணர்வதாகவும் கூறினர்.  தீமையின் வினைப்பயனை நீங்கள் சங்கடமான உணர்த்தலாகவும், நன்மையின் வினைப்பயனை சந்தோஷமான உணர்த்தலாகவும் நீங்கள் உங்கள் உடலிலே உணர முடியும். இதை விரிவாக நீங்கள் பயிற்சியின் போது விளக்கப்படும். அதை அனுபவமும்  செய்ய  முடியும்.

இதில் சிலருக்கு எந்த அனுபவமும் ஏற்படுவது சற்று கடினமாக இருக்கும். யார் முன் அனுபவமாக தியான பயிற்சிகளை செய்தவர்களாக உள்ளனரோ, அவர்கள் எளிதில் அந்த அனுபவங்களை பெறுவார்கள். தியான பயிற்சி அனுபவங்கள் இல்லாதவர்கள் சிலகாலம் இந்த விபாசான பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அதை உணர முடியும்.

வினைப்பயன்கள் அற்ற நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் வரை அதை பல நிலைப் பயிற்சிகளாக அமைத்துள்ளனர். முக்தியோ அல்லது  ஜுவன் முக்தியோ கிடைப்பது சித்தி வீட்டிற்கு செல்வது போல இலகுவான விஷயம் அல்ல அல்லது கடவுளர்களின் அருளாலும் கிடைப்பது அல்ல. தியானப் பயிற்சியின் மூலமே அதை நம்  முன்னோர்கள் அடைந்துள்ளனர். ரிஷிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் சொல்வது உயர் ஆன்ம உணர்வை பெற வேண்டும் என்றால் அதற்கு தியானம் ஒன்றே வழி என்கின்றனர்.

அத்தகைய தியான பயிற்சிதான் புத்தர் நமக்கு நல்கி சென்ற விபாசான பயிற்சி. என்னை பொறுத்தமட்டில் என்னால் அந்த வினைப் பயன்களின்  உறுத்தல்களை  நன்கு உணர முடிந்தது. காரணம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஆன்மிக பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருபவன் என்பதால், அந்த பயிற்சியின் எல்லா அனுபவங்களையும் பெற முடிந்தது.  அது சந்தோஷ உணர்வாக இருந்தாலும் சரி, சங்கடமான உணர்வுகளாக இருந்தாலும் சரி,  இரண்டையும் பார்க்க முடிந்தது.  இது இரண்டையும் கடந்து பேரானந்த பெருவெளியில் பயணிக்க கூடிய பயிற்சிதான் விபாசானா.

நம் வாழ்க்கையில் இரண்டு நிலைகளையும் பார்க்க முடியும். இன்பமும். துன்பமும். இரண்டுமாகத்தான் வாழ்க்கை இருக்கிறது.  ஆனால் நம் உண்மைநிலை இரண்டையும் கடந்தது. அதற்கு செல்லும் வரை இந்த பிறப்பு இறப்பு சக்கரத்தில் சுழன்று அந்த பேரானந்த பெருவெளியில் சஞ்சரிக்கும் பெரும் பாக்கியம் நமக்கு கிடைக்கப் பெறுவதில்லை. அதுவரை நம் முயற்சி தொடர்ந்து நடக்க வேண்டும். அதற்கே இந்த வாழ்க்கை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com