[:en]எனது ஆன்மிகம் – 43 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

‘தம்ம சேது’ என்றால் ‘தம்மத்தின் பாலம்’ என்று பொருள்படும். 18 சதுர ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் நிறுவப்பட்டுள்ள இம்மையம் 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரு கோயங்காஜி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மைய வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.

மையத்தின் முக்கிய தம்ம கூடம் 120 நபர்கள் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்படுள்ளது. கூடுதலாக 75 பேர் அமரக்கூடிய இரண்டு கூடங்களும் உள்ளன. இவற்றைத் தவிர 30 பேருக்கான ஒரு சிறிய தம்ம கூடமும் உள்ளது. மையத்திற்கு முடிசூட்டும் வகையில், மூன்று சுற்றுகளாக 288 தியான அறைகள் கொண்ட பகோடா (விஹாரம்) கட்டப்பட்டு, பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இது திரு கோயங்காஜி அவர்களால் 2006-ம் ஆண்டு மே மாதம் துவக்கிவைக்கப்பட்ட இந்த பகோடா தியானம் செய்ய மிகவும் உகந்த சூழலை உருவாக்கும்.

தற்சமயம் இந்த மையத்தில் ஒரே சமயத்தில் 96 ஆடவரும், 48 மகளிரும் தங்கியிருந்து தியானப் பயிற்சி பெற வசதியான இரு-படுக்கைகள் கொண்ட அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையிலும் குளியலறை இணைக்கப்பட்டுள்ளது. குளிக்கும் நீரை சூடேற்றவும் வசதி உண்டு. 200 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக்கூடமும் உள்ளது. முதன்மை ஆசிரியருக்கும், உதவி ஆசிரியர்களுக்குமான இருப்பிடங்களும் அமைந்துள்ளன. தென்னைமரங்களும், செழிப்பான தோட்டமும், நிழலான நடைபாதைகளும் மையத்திற்கு வனப்பு சேர்க்கின்றன.

தம்ம சேது மையத்தில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாதம் இருமுறை 10-நாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிவழிகளில் தியானப் பயிற்சி பெறுவோர்க்கு ஒலிநாடா மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெறுநர்களின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட சில மற்ற மொழிகளிலும் ஒலிநாடா வழங்க மையத்தில் வசதிகள் உள்ளன. சிறுவர்களுக்கான ஒருநாள் மற்றும் இரண்டு-நாள் முகாம்களும் தம்ம சேது மையத்தில் அவ்வப்பொழுது நடைபெற்று வருகின்றன.

தொடரும்       முந்தயபகுதி

 

 [:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com