[:en]எனது ஆன்மிகம் – 45 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

சுவாமி சார்லஸின்  ஒரு உலக அமைதி அமைப்பு, கேரளாவில் உள்ள மலையத்துர் என்னும் இடத்தில் உள்ளது. இது ஆதி சங்கராச்சாரியார் பிறந்த காலடி என்ற ஊரில் இருந்து 7 கிலோ மீட்டரில் உள்ளது. இவ்வூரின் மற்றோரு சிறப்பு,  இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் 13 பேரில் இந்தியாவுக்கு வந்த புனிதர் தோமா, இங்கு உள்ள மலையில் சிறிது காலம் தவம் செய்துவிட்டு, சென்னை சென்றதாக சொல்கிறார்கள். அங்கு ஒரு கிறிஸ்துவ மிஸினிரி டிரையினிங் சென்டரும்  உள்ளது.

சுவாமி சார்லஸ் மலையத்துரில் நடத்திய தியான முகாமுக்கு சென்றிருந்தேன். ஆஸ்ரமம் 3 கிரவுண்ட் நிலத்தில் அமைத்துள்ளார். பெரியார் நதிக் கரையோரம் அமைந்துள்ளது.  ஆஷ்ரத்தின் பின்புரம் ரம்மியமான பெரியார் நதியின் நீரோட்டத்தை நீங்கள் காணலாம். அதிகாலை சூரிய உதய காட்சி மிகச் சிறப்பானது.  அமைதியான இடம்.

நாங்கள் ஒரு 20 பேர் அங்கு தியான பயிற்சிக்கு சென்றிருந்தோம். காலை 5  மணிக்கு எழுந்திருந்து, தியானப் பயிற்சியில் ஈடுபடுவோம். ஒரு மணி  நேர தியானப் பயிற்சிக்குப் பிறகு சிறிது வார்ம் அப் செய்து கொள்ளுவோம். ஆசனங்கள்,  சிறிது உடற்பயிற்சிக்குப் பிறகு காலைக் கடன்களை  முடித்துவிட்டு,  பெரியார்  நதியில் சென்று நீராடுவது மிகவும் ஆனந்த அனுபவம். நல்ல சுத்தமான நீர். ஆழம் தெரியாது என்பதால், கரையோரம் குளித்துவிட்டு வந்துவிடுவோம்.

அதன் பின்பு காலை உணவுக்குப் பின் ஆன்மிக வகுப்புகள் ஆரம்பம் ஆகும். அதில் ஆங்கிலத்தில் சுவாமி சார்லஸ் உரை நிகழ்தினார். இடையில் தமிழிலும் விளக்கங்களை சொன்னார். இப்படியாக அவரின் வகுப்புகளுக்கிடையே தியானமும் பயிற்சிக்கப்படும். 1 மணிக்கு சாப்பாடு இடைவேளை. நாங்கள் அருகில் இருந்து உணவகத்திற்கு சென்று உணவருந்தி வந்தோம். எங்களோடு சுவாமிஜியும் வருகை தந்தார்.

அதன் பின் ஒய்வு 4 மணிக்கு பிறகு டீ டயம் முடிந்து, தியானம், பிறகு வகுப்புகள் என்று  இரவு  8  மணி வரை நடக்கும். அதன் பின் இரவு சாப்பாடு உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு விட்டு இரவு 10 மணிக்கு துங்க செல்வோம். இப்படியாக. மூன்று நாட்கள் வகுப்புகள் நடந்தது. இடையில் மதிய உணவுக்குப்பின் அருகில் பார்க்க வேண்டிய இடங்களுக்கும் சென்று வந்தோம். அவர் படித்த, பிறந்த ஊரான அலுவா அருகில் உள்ளது. அங்கு சென்று வந்தோம். நாராயண குருகுலம் ஒன்று இருந்தது. அங்கு சென்று  வந்தோம். காலடி சங்கராச்சாரியார் பிறந்த இடத்திற்கு சென்று அவருக்கான கோயிலுக்கும் சென்று வந்தோம். இப்படியாக இரு தினங்கள் அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வந்தோம்.

சுவாமி சார்லஸ் பல பயிற்சி முகாம்களை தமிழ்நாட்டிலும் நடத்தி வருகிறார். சில பயிற்சி முகாமும்களுக்கு சென்று  வந்துள்ளேன். சில நேரங்களில் கலந்து கொள்ள இயலாது. இது நல்ல ஆன்மிக அனுபவங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply