[:en]எனது ஆன்மிகம் – 46 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

நான் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் சுவாமி சார்லஸ் சைதன்யாவை சந்தித்து வருகிறேன். சிந்தாரிப்பேட்டையில் 15 தினங்களுக்கு ஒரு முறை நாராயண குரு ஆஷ்ரத்திற்கு அவர் தவறாது வருகிறார். அப்படியாக தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்து வருகிறது. இறுதியாக அவருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்லி இவரைப் பற்றிய விவரத்தை முடிக்கிறேன்.

நான் அப்போது திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூம் எடுத்து தங்கியிருந்தேன். சொந்தமாக இணைய வடிவமைப்பு வேலைகளை செய்து வந்தேன். அது சமயம் அத்தொழில் ஒன்றையே நம்பி இருந்ததால், பணம் கிடைப்பதில் தாமதமாகும் பட்சத்தில், சில சமயம் பணபற்றாகுறையால் மிகவும் சிரமப்பட்டு வந்தேன். அப்போது மனம் மிகவும் சஞ்சலப்பட்டுக் கொண்டு இருக்கும். அது சமயம் ஒருநாள் அவரை சந்திக்க சென்றேன். காலை நேரம் அப்போது மழை காலம் என்பதால் மழை மேகமாக இருந்தது. இருந்தும் மழை வராது என்ற நம்பிக்கையில் சென்றேன்.

நான் செல்லும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. நான் ஆஷ்ரமத்திற்கு அருகில் வந்துவிட்டேன். நான் மழையோடு நனைந்து கொண்டே சென்றேன். அப்போது சுவாமி ஆசனங்களை செய்து கொண்டு இருந்தார். அவருக்கு நான் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருந்தும் என்னை உட்கார சொல்லி மழையோடு எதற்கு வந்தாய் என்றார். நான் மழை வரும் வழியில் பிடித்துக் கொண்டது என்றேன்.

சிறிது நேரம் பேசி விட்டு, சரி நான் கிளம்புகிறேன் என்று சொல்லி கிளம்பி வெளியே வரும் சமயம், என்னை கூப்பிட்டார். நான் திரும்பவும் சென்றேன். அப்போது அவருடைய கையை எடுத்து என்னுடைய புருவ மத்தியில் வைத்தார்.

அவ்வளவு தான் அப்படியோரு சக்தி என் உடலெங்கும் பரவியது, அதை எப்படி உங்களுக்கு விவரிப்பது என்று தெரியவில்லை. அது மிகுந்த ஆனந்தத்தை கொடுப்பதாக இருந்தது. நான் எவ்வளவு மன சஞ்சலத்தோடு வந்தேனோ, அத்தனையும் காணமால் போனது. நான் மிகவும் லேசாக உணர்ந்தேன். பிரச்னைகள் அப்படியேதான் இருந்தன. ஆனால் அவை என்னை பாதிக்கவில்லை. இது சுவாமியோடு எனக்கு மறக்க முடியாத அனுபவம். இது சுவாமி விவேகானந்தருக்கு, பரமஹம்சருக்குமிடையே ஏற்பட்ட அனுபவத்தை போன்றது என்று எண்ணுகிறேன்.

இப்படியாக நான் மன சஞ்சலத்தோடு இருப்பதை அறிந்து, அதற்கு மருந்து கொடுப்பது போல தனது சக்தியை எனக்கு சிறிது கொடுத்து உதவியதை நான் என்றும் மறக்க மாட்டேன். இன்றும் நான் அவரை சந்திக்க சென்று வருகிறேன்.

சுவாமிஜியின் முக்கியமான கருத்து, நாம் உலக முழுமைக்கும் தோற்று வாயிலாக உள்ள பிரம்மத்தின் ஒரு அங்கம். நாம் நம்மை உணர்ந்து பிரம்மத்தை அறிவது தான் நமக்கான லட்சியம் என்பார். நாம் காண்பது அனைத்தும் பிரம்மமே, அதுவே பல வடிவமாக உள்ளது. உண்மையை உணருபவனுக்கு ஒரு கவலையும் இல்லை என்பார். இதை அறியும் இரகசியத்தையே தன்னை நாடி வருபவர்களுக்கு சொல்லித் தருகிறார்.

[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com