[:en]எனது ஆன்மிகம் – 47 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஓஷோ

நான் அடுத்ததாக  உங்களுக்கு சொல்லப் போவது செக்ஸ் சாமியார் என்று உலகெங்கும் அறியப்பட்டு, பரபரப்பாக பேசப்பட்ட ஞானி ரஜினிஷ் பற்றித்தான்.

ஞானி ரஜினிஷ் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் உள்ள குச்சுவாடா என்ற சிற்றுரில் பிறந்து, ஆன்மிக உணர்வுகளால் உந்தப்பட்டு, சிறுவயது முதலேயே ஆன்மிக எண்ணங்களோடு, ஆராய்ச்சிகளோடு இருந்து வந்தார். இவர் ஜெய்ன மதத்தைச் சோர்ந்தவர்.

இவர் தனது தாத்தா, பாட்டி தான் தனது குரு என்று சொல்கிறார்.  ஏன் என்றால் அவர்கள் இவரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து, வழிகாட்டியுள்ளனர். இவரின் சுதந்திரத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறுகிறார். இவரின் தாத்தாவின் மரணம் இவருக்கு ஆன்மிகத்தில் ஈடுபட ஒரு திருப்பு முனையாக இருந்ததாக சொல்கிறார்.

தத்துவத்தில் கோல்ட் மேட்லிஸ்டாக தனது பட்டப் படிப்பில் தேர்ச்சியுற்று,  தான் படித்த கல்லுரியிலேயே தத்துவ பேராசியரியராக பணிபுரிந்து, சிறிது காலத்திற்குப் பின், அப்பணியில் ஈடுபாடு இல்லாது. முழுமையாக மக்களுக்கு ஆன்மிக கருத்துக்களை போதிக்க மக்களை சந்திக்க வருகிறார். அது சமயம் இவரின் மாறுபட்ட, வேறுபட்ட ஆன்மிக விளக்கங்கள் மக்களின் சில பகுதியினரை ஈர்க்க, மற்றொரு பகுதியினருக்கு எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

எல்லா மதங்களின் உட்கூறுகளையும், எளிய முறையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் விளக்குவதில், இவரை மிஞ்ச ஆள் இல்லை. இன்று பட்டி தொட்டி முதல் பாமரன் வரை இவரின் வீச்சு சென்று சேர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இவரின் கருத்துக்கள் பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக புத்தகங்களாக வந்த பின் இவரின் அறிமுகம் இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லாம். அப்படியாக ஆன்மிகத்தை நவீன மனம் சார்ந்து விளக்குவது அனைவரையும்  சென்று சேர்ந்தது.

முதலில் இந்திய முழுமைக்கும் பல்வேறு கூட்டங்களில் பேசி வந்தபோது, எவரும் இவரின் அடிப்படைக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள வில்லை என்றும், கதை கேட்டு பழகிய மனது, கதை சொல்லும் போது மட்டுமே மக்கள் விழித்திக் கொள்வார்கள் என்றும். அது இம்மக்களின் பால் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் தந்தது என்றும் கூறுகிறார்.

ஆனால் சில காலங்களுக்குப் பின் மேற்கத்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது  அங்குள்ள மக்கள் இவரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு  அமெரிக்காவில் ஓரிகன் மாநிலத்தில் ரஜினிஷ்புரம் என்ற நகரத்தை,  அமெரிக்க அரசாங்கத்தால் வாழத் தகுதியற்ற இடம் என்று அழைக்கப்பட்ட இடத்தை வாங்கி ஆஷ்ரம்த்தை கட்டினார். அது முதல் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பல கூட்டங்களில் பங்கேற்று பேச, வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான சீடர்களை பெற்றார்.  சில காலங்களுக்குப் பிறகு தனது பெயரை ஓஷோ என்று மாற்றிக் கொண்டார். அதன் அர்த்தமாக அவர் சொல்வது.  மாபெரும் சமுத்திரத்தில் ஒன்று கலப்பது என்பதாகும்.

தொடரும்       முந்தயபகுதி

 [:]

You may also like...

Leave a Reply