[:en]எனது ஆன்மிகம் – 48 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஓஷோ

எனக்கு ஓஷோவுடனான அறிமுகம் கிடைத்தது ஒரு அதிசய அனுவபம். அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் அதற்கு முன்பாக ஒரு ஆன்மிக அமைப்போடு தொடர்பில் இருந்து, அவர்கள் கற்றுக் கொடுத்த தியானம் எனக்கு முழு திருப்தியை தராததால், கடவுளிடம் பிரார்த்னை செய்து கொள்கிறேன், எனக்கு ஒரு தகுந்த குருவை அனுப்பித் தாருங்கள் என்று.

அது சமயம் நான் மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எனது நண்பர் ஒருவர் அழைப்பது கேட்டு திரும்ப,  அவரும் அதே அமைப்பில் என்னோடு தியானம் கற்றுக் கொள்பவராக இருந்தார். நான் அவரிடம் செல்ல, வழக்கமான நடைமுறை பேச்சுக்குப் பிறகு, சில ஆன்மிக விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார், அவர் சொன்ன விஷயம் உண்மையாகவும்,  சுவாரசியம் மிக்கதாகவும் இருந்தது. உடன் அவர், இது யார் சொன்னது தெரியுமா? என்று கேட்டார். யார் சொன்னது என்று கேட்க, செக்ஸ் சாமியார் ரஜினிஷ் தெரியுமா? என்று கேட்டார். கேள்விப்பட்டிருக்கிறேன்,  ஆனால் அவர் பற்றி அவ்வளவாக தெரியாது என்று சொன்னேன். அந்த நண்பர் இதுவரை நான் சொன்ன விஷயங்களை பேசியவர் ஓஷோ ரஜினிஷ் தான் என்றார். யார் சொன்னால் என்ன,  உண்மையான விஷயமாக இருந்தால், அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே? இதில் நபரை பற்றி பார்க்க வேண்டியது இல்லை என்றேன்.  அப்படியென்றால் நான் அவரின் புத்தகம் ஒன்று தருகிறேன். அதை நீங்கள் படிக்க வேண்டும் என்றார். கண்டிப்பாக என்று சொல்ல, அடுத்த நாள் எனக்கு ஒரு புத்தகம் ஒன்றை தந்தார்.

அது தியானமும், அமைதியும்  என்ற புத்தகம். நான் அப்போது மதுரையில் ஒரு விற்பனை பிரதிநிதியாக இருந்த காரணத்தால், அதிகாலையிலேயே கிளம்பி பல மாவட்டங்கள் பயணப்படும் வேளையில் இருந்தேன். அது சமயம் பஸ்ஸில் போய் கொண்டிருக்கும் போது புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம் இதுநாள் வரை எனக்கு இருந்த கேள்விகளுக்கு எல்லாம் ஓஷோ ரஜினிஷ் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் முக்கியமான கேள்வி, எது தியானமும் என்பதே.

ஓஷோ ரஜினிஷ் மனம் கடந்த நிலை தான் தியானம் என்பதை மிக அற்புதமாக விளக்கியிருந்தார். அது வரை தியானம் பற்றிய குழப்பத்தில் இருந்த எனக்கு அது ஒரு மாபெரும் உதவியாக இருந்தது. அவர் அதில் சொல்லியிருந்த வழிமுறையை படிக்க, படிக்க அப்படியே எனக்குள் அனுபவமாக மாறிக் கொண்டிருந்தது. நான் சிறிது சிறிதாக, மனதை உற்று நோக்கி, எனக்கும் மனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு கருவி என்பதை தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com