[:en]புளோரிடாவிலிருந்து பாய்ச்சப்பட்ட உலகின் ஆக சக்திவாய்ந்த ராக்கெட்[:]

Advertisements

[:en]

உலகின் ஆக சக்திவாய்ந்த விண்வெளிக் கலனாகக் கருதப்படும் ராக்கெட் ஒன்று, அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தில் உள்ள கென்னடி (Kennedy) விண்வெளி நிலையத்திலிருந்து பாய்ச்சப்பட்டுள்ளது.

அத்தகைய Falcon கனரக ராக்கெட் ஒன்று, சூரியனை சுற்றியுள்ள பாதையில், சிவப்பு நிற Tesla விளையாட்டு வாகனத்தைக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிக எடைகொண்ட பொருட்களை கிரகங்களை சுற்றியுள்ள பாதைக்குக் கொண்டு செல்லும் தன்மை அந்தப் புதிய விண்வெளிக் கலனுக்கு இருக்கும் என்று விண்வெளி நிலையம் நம்பிக்கை தெரிவித்தது.

வருங்காலத்தில், விண்வெளி வீரர்களை நிலவுக்கு ஏற்றிச் செல்வது, அந்த விண்வெளிக் கலனின் இலக்கு என்றும் அது கூறியது.

பல முறை தாமதிக்கப்பட்ட அந்த முயற்சி, தற்போது செயல்படுத்தப்பட்டிருப்பது பற்றி, விண்வெளி நிலையம் மகிழ்ச்சி தெரிவித்தது.

தற்போதைய சோதனை முயற்சி, வெற்றி காண்பதற்கு 50 முதல் 70 விழுக்காடு வரையிலான வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக அது கூறியது.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com