[:en]தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பொருளாதாரம் கீழ்நோக்கி செல்கிறது: ப. சிதம்பரம்[:]
[:en]
புதுடெல்லி,
ஜக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 வருட சராசரியை விட இன்றைய ஆட்சியில் வளர்ச்சி விகிதம் குறைவாகவும் மற்றும் கீழ்நோக்கியும் செல்கிறது என காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் படிக்கவும்
உலகத்தின் மிக இளமையான Boeing 777 கமாண்டர் ஆன ஒரு இந்திய பெண்மணியின் ஊக்கபடுத்தும் கதை. ஊக்கபடுத்தும்
நிறைய கஷ்டங்களை மீறி இவர் இந்த கனவை மிக சிறிய வயதில் அடைந்தார். மீறி
வழங்குவோர்
மேலும் பல டுவிட்களில், உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 30 வருட சராசரி அளவை விட குறைந்துள்ளது என கூறியுள்ளார். ஆனால் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
4 வருட தேசிய ஜனநாயக கூட்டணியின் சராசரி என்ன? புதிய முறையில் 7.3 ஆகும் மற்றும் ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு சராசரியை விட இது குறைவு. தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி விகிதம் எந்த திசையில் உள்ளது? முதலீடுகள்? சேமிப்பு? கடன் வளர்ச்சி? இவை அனைத்தும் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது 2018 – 2019 பட்ஜெட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி 2014 மே மாதம் பதவியேற்றது முதல் இந்திய பொருளாதாரம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
“எங்கள் அரசாங்கத்தின் முதல் மூன்று வருட ஆட்சியில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி 7.5 சதவீதம் ஆக இருந்தது. இந்திய பொருளாதாரம் இப்போது 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ளது. இது உலகளவில் ஏழாவது மிகப்பெரிய இடம்”என அவர் கூறினார்.[:]