[:en]எனது ஆன்மீகம் – 56 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யலாயம் மனித குல மேம்பாட்டிற்காக, உலக அமைதிக்காக இந்த அரிய ஞானத்தை பரமாத்மா சிவன் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  உலகில்  கடவுளை பற்றி தேடுதலில் பலரும் பல விளக்கங்களை அளித்தாலும். எதுவும் முழுமையாக விளக்கங்கள் அல்ல. ஒன்றுக்கொன்று முரண்பாடானவைகளாகத்தான் உள்ளன.  காரணம் கடவுளைப்பற்றி கடவுளே தான் சொல்ல வேண்டியுள்ளது. மனிதன் சொல்வது குறைவாகத்தான் இருக்கும்.

என்னைப் பற்றி நான் தான் முழுமையாக சொல்ல முடியும். அடுத்தவர் சொல்வது குறைவாகத்தான் இருக்கும்.  ஆகையால் பரமாத்மா சிவன் சொல்கிறார். என் அறிமுகத்தை  நானே இந்த லேக்ராஜ் மூலம் சொல்கிறேன். நான் யார்? நான் எங்கு இருக்கிறேன்? எப்போது வருகிறேன்? வந்து என்ன செய்கிறேன். உங்களுக்கும் எனக்குமான தொடர்பு என்ன? என்பதையெல்லாம் இந்த தெய்வீக ஞானத்தின் மூலம் விளக்கிச் சொல்கிறார்.

முதலாவதாக தன் அறிமுகத்தைச் சொல்லும்போது.  நான் ஒரு ஒளிப்புள்ளியாக,  ஜோதி சொரூபமாக உள்ளேன் என்றும்.  நான் சர்வசக்தியின் கடலாக உள்ளேன் என்றும் கூறுகிறார்.  தெய்வீக  குணங்களின் கடலாக உள்ளார். அன்புக்  கடல், கருணைக் கடல், அமைதிக் கடல், சக்திக் கடல் என்று அவரின் தெய்விக குணங்கள் அளப்பறியது. அவர் ஒளிப்புள்ளியாக உள்ளார். ஆனால் அனைத்து தெய்வீக குணங்களின் கடலாக உள்ளார்.

லேக்ராஜ்

அவரின் சிறப்பம்சம் என்னவெனில்,  அவர்  பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவர்.  எந்த  ஒரு தாயின் வயிற்றிலும் ஜனனம் எடுக்காதவர்.  இவ்வூலகத்திற்கு வருகை  தருவது கூட தனக்கு ஒருவரின் உடலை ஆதாரமாக எடுத்து வருகிறார். அவர்தான் திரு.லேக்ராஜ். உலகில் 700 கோடி பேர்  இருக்கையில்    திரு.லேக்ராஜை தேர்ந்தெடுப்பதின் நோக்கம் என்ன. அவர்தான் சத்தியுகத்தின் சக்ரவர்த்தியான ஸ்ரீ நாரயணன் ஆவார்.  அவரை ஸ்ரீநாரயணன் ஆக்குவதே பரம்பிதா பரமாத்மா சிவானகும்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com