[:en]எனது ஆன்மீகம் – 61 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

நம்மில் அனேகர் இப்படியாக சொல்வதைக் கேட்டிருக்கிறோம். என்னவென்றால்,  இது  என்  கர்ம கணக்கு என்பார்கள். காசிக்குப் போனாலும் கர்மம் தீராது என்பார்கள். காசிக்குப் போய் என் கர்மத்தை தீர்க்கப் போகிறேன் என்பார்கள்.

கர்மம் தீர்க்கும் ஸ்தலமாக இரண்டு உள்ளது. ஒன்று காசி. இரண்டாவது இராமேஸ்வரம். இது இந்துக்களின் நம்பிக்கை. காசியில் கங்கையில் போய் குளித்தால் கர்மம் தீர்ந்துவிடுமா? இது நம்பிக்கை. நம்பிக்கை சில நேரங்களில் உங்களுக்கு உதவலாம். தன்னம்பிக்கை தரலாம். ஒரு புது முயற்சியை செய்ய உதவலாம். ஆனால் யதார்தத்தில் அப்படி இருக்குமா? என்றால் அது  அவரரவர்  தனிப்பட்ட நம்பிக்கையாகவே இருக்கிறது.

ஆக கர்மம் என்பது என்ன?  நாம் செய்யும் செயலின் சமஸ்கிரத சொல்தான் கர்மம்.  தமிழில் நமது செயல் என்று சொல்லிக் கொள்ளலாம். நமது செயலே நமது வாழ்க்கை. நமது வாழ்க்கையை தீர்மானிப்பது.  முன்ஜென்ம  செயல்களின் எச்சம்,  இச்ஜென்ம செயல்கள்  ஆகியவற்றின் தொகுப்பே கர்மம்.  இச் செயல்கள் நல்ல செயல்களாக,  ஆதாவது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்மை செய்யக் கூடிய செயலாக,  மகிழ்ச்சி தரக் கூடிய செயலாக இருந்திருக்கலாம். அல்லது தீங்கோ அல்லது துக்கமோ கொடுக்கக் கூடிய  செயலாக இருந்திருக்கலாம்.  இதன் பதிவுகள் ஆத்மாவில் பதிவாகின்றன.

ஒவ்வொரு செயலுக்கும், எதிர்ச்செயல் உண்டு. இது விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் ஒத்துக் கொண்டு  சமன்பாடு. இப்படியாக செய்தால், இப்படியாகத் தான் பலன் கிடைக்கும் என்பது ஆகும். நீங்கள் நன்மை செய்தால் நன்மை அடைவீர்கள்.    தீமை  செய்தால்  தீமையை  அடைவீர்கள் என்பது சமன்பாடு.  தெரிந்தும் நாம் தீமையையே அதிகம் செய்கிறோம். காரணம் என்ன?  நமது பதிவு. நாம் முன் ஜென்ம, இச்ஜென்ம பதிவுகளின்,  எதிர்  விளைவுகள் நம்மை அப்படிச் செய்ய துண்டுகின்றன.  ஆகையால் நீங்கள் விரும்பாவிட்டாலும். உங்களையும் மீறி அப்படித்தான் நீங்கள் செய்வீர்கள். காரணம் உங்களுக்கான  ஆளுமை குறைவாக இருப்பதே.  மனம்  உங்கள்  மீது  ஆதிக்கம் செலுத்தும் போது,  உங்களின் கடந்த கால பதிவுகள் எத்தகையதோ, அத்தகையதாக உங்கள் செயல்கள் இருக்கும். இதை மாற்றி அமைக்க முடியும்.  அதற்கு  முன் நாம் சில வற்றை அறிந்து கொள்வோம்.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply