[:en]காவேரி வருமா? வராதா?  –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

100 ஆண்டு கால பிரச்னை ஒரு வழியாக தீர்வுக்கு வந்துவிட்டது என்று பெருமூச்சு  விடுவதா? இல்லை உள்ளதும் போச்சு கண்ணா,  என்று நீர் வரத்து குறைக்கப்பட்டது குறித்து குறைபட்டுக் கொள்வதா? என்று பட்டிதோறும் பட்டி மண்டபம் நடந்து கொண்டிருக்க, ஏதோ கொடுக்கச் சொல்லியதையாவது கொடுத்தால் சரிதான் என்ற தமிழக விவசாயிகளின் நிலை உள்ளது.

சரி கொடுக்க சொல்லிய தண்ணீர் சரியாக அளந்து கொடுக்கப்பட நதி நீர் ஆணையத்தை அமைக்க சொல்லி கால நிர்ணயமும் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.  6 வார காலம். அமைக்குமா மத்திய அரசு?  அமைக்க விடுமா மாநில அரசு? என்று அதற்கொரு பட்டிமன்றம் வீதிதோறும்.

நீதிமன்றம் தன் கடமையை செய்து முடித்துவிட்டது.  மத்திய,  மாநில  அரசுகள்  தங்கள் கடமையை தவறாது செய்ய வேண்டும். இல்லை என்றால் இந்திய இறையாண்மை மீது தமிழ் மக்களுக்கு இருக்கும், எச்ச பட்ச நம்பிக்கையும் தகர்ந்து போய், நாம் இந்திய தேசத்தில் தான் இருக்கிறோமா? என்ற நியாயமான கேள்வி எழும். அதற்கு பதில் சொல்ல இந்த தேசத்தின் மற்ற பகுதியில் வாழும் அத்தனை மக்களுக்கும் கடமையுள்ளது.  7 கோடி மக்களுக்கு வழங்கப்பட்ட  தீர்பை. உங்கள் அரசியல் காரணங்களுக்காக ஆறப் பொட்டால்,  அதன்  விளைவுகளை  எந்த திசையில் செல்லும் என்று யாரும் கணிக்க முடியாது.

அற்ப அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கேலிக்கூத்தாக்கினால். பிறகு உச்ச நீதிமன்றத்தை யார் மதிப்பார்கள் என்ற நிலையாகிப்போகும்.  இது இந்திய அரசியல் அமைப்பின் தடுமாற்றத்தை காட்டும் விஷயமாகிப் போகும்.  தடுமாறும் அமைப்பு அதன் கட்டுப்பாட்டை இழந்து போகும். பிறகு நாடு நாடாக இருக்காது என்பதை எல்லாத்தரப்பும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில்  சட்டசபைக்கான தேர்தல், இதில் ஆளும் காங்கிரஸ், மற்றும் ஆளத் துடிக்கும் பாஜக இடையே கடும் போட்டி.  இங்கு காவேரி பிரச்னை களத்தில் உள்ள பந்தாக இருக்குமேயானால்.  அது  அழகான விஷயமாக இருக்காது.

மத்திய அரசின் நீர்வளத்துறை  அமைச்சர்  நிதின் கட்கரி வரும்? ஆனா வராது என்ற என்னத்தை  கன்னையா வசனம் பேசுகிறார்.  தேர்தல் ஆதாயம் பார்க்கும் நேரம் இல்லை இது என்பதை தமிழக மற்றும் மத்திய பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் வளர வேண்டும் என்று விரும்பும் அவர்கள்.  தமிழக  நலனைக்  காக்க உருப்படியாக எதாவது செய்ய வேண்டும். அதை விடுத்து, வேண்டாத விஷயங்களை பேசுவது,  அவர்களை மக்கள் புரம் தள்ளவே ஏதுவாக இருக்கும்.  கடைசியாக  சில செய்திகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மாநில பிரதிநிதிகளை  ஆலோசிக்க  கூட்டம் கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. வரவேற்கிறோம். கண்டிப்பாக  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை விடுத்து  பிரதமரை பார்கிறேன், அமைச்சரை பார்க்க வேண்டும் என்ற  அரசியல் டிராமாக்களை பார்த்து மக்கள் நம்பிக்கை இழந்து போய் உள்ளனர்.  இனி பேச்சு வார்த்தை என்பது எதுவும் தேவையில்லை.  நடவடிக்கை  மட்டுமே  தேவை.

[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com