[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 64[:]

Advertisements

[:en]

ஆத்மாவாகிய நாம் இந்த உடலின் ஆதாரத்தை எடுத்து, இந்த உலகம் என்னும் நாடக மேடையில் 5000 வருடங்கள் அதிகபட்சமாக நடிக்க வருகிறோம்.  எல்லோருக்கும் 5000 வருடங்கள் நடிக்கும் வாய்ப்பு உள்ளதா என்றால், இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும்,  இதன்  எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர, ஒரே நேரத்தில் 700 கோடி ஆத்மாக்களும் நடிக்க வருவதில்லை.  ஆனால் நாடகத்தின் இறுதி நேரத்தில் 700 கோடி ஆத்மாக்களும் நடிக்க வந்து விடுகின்றனர். எல்லோரும் அவரரவருக்கான  நாடக பாத்திரத்தை நடிக்க வந்துவிட்டபின், நாடகம் முடிவுக்கு வருகிறது.

அத்தகைய நேரம் தான் இது. இது கடவுளும், மனிதனும் சந்திக்கும் நேரம். இதற்கு சங்கம யுகம், சந்திப்பு யுகம் என்று பெயர். இந்த நேரத்தில் இதற்கான வாய்ப்பு அமைந்தவர்கள் கடவுளை சந்தித்துக் கொள்கின்றனர்.  சரி கடவுள் எங்கு வருகிறார்?. பரமாத்மா சிவன் இந்தியாவில்தான் வருகிறார். குறிப்பாக இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபுமலையில்  பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் அமைந்துள்ளது. அங்கு தான் அவர் வருகிறார். இதை பார்த்து, அறிந்து, உணரக் கூடிய வாய்ப்பு இந்த நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. எல்லோருக்கமான அனுமதி அல்ல.

கடவுள் அனைவருக்குமானவர் என்றாலும், அவருக்கான கடமையை செய்யத்தான் வருகிறார். அது சமயம். அவரோடு அவரின் கடமையில் பங்கேடுத்துக் கொள்பவர்களை அவர் சந்திக்கிறார். அவரின் கடமைதான் என்ன? இந்த பழைய உலகத்தை புதிய உலகமான சத்திய உலகத்தை உருவாக்குவதே ஆகும்.

எல்லோருக்கும் ஆசை பிரச்னைகள் அற்ற,  அமைதியான, சுகம் நிறைந்த உலகமாக நமது நாடு இருக்க வேண்டும் என்று. உலகின் எல்லா பகுதிகளிலும், ஒவ்வொரு மக்களும் நினைக்கும் விஷயம். ஆனால்  இன்று நிலைமை அப்படி இல்லை. இதற்கான காரணம் என்ன? இதன்  மாற்றம் எப்படி நிகழும். அப்படியான உலகம் நிறுவப்படுமா? அதில் நாம் பங்கேடுக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது, பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயத்தின் இறைத் தந்தை பரமாத்மா சிவன் அருளும் தெய்வீக

ஞானம்.

 

தொடரும்       முந்தயபகுதி

 

 

 [:]

You may also like...

Leave a Reply