துறவு என்பது உண்மையிலேயே துறவுதான்!

Advertisements

ஆனால்

அதை நாம் இனிமேல்தான் செய்வது என்றில்லை!

ஏற்கனவே, துறவில்தான் இருக்கிறோம்.

அதன் பரிமாணத்தை, முதன் முதலாக உணர்வதற்காகத்தான் தியானம் உதவுகிறது.

முதன் முதலாக கண்டபின், தியானம் தொடர வேண்டியதில்லை.

தூங்குபவன் கனவு காண்கிறான்.
கனவை, அக்கனவில் நிஜமான வாழ்வு இதுதான் என நினைத்து, அக்கனவின் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்.

விழித்தவுடன், அக் கனவு அதுவாகவே துறவிற்கு ஆளாகிறது.

தூங்கியவன் இப்போது தன் சுய நிலையை உணர்வது என்பது கனவினிலிருந்து அவனுக்குக் கிடைத்த முக்தி ஆகும்.

இந்த விழித்தவன், தியானத்தால் இன்னொரு விழிப்பிற்கு ஆளாகிறான்.

அந்த விழிப்பினில், அவன் இந்த உலக வாழ்க்கையில், தான், ஏற்கனவே இல்லைதான் என ஸ்பஸ்டமாக உணர்கிறான்.

அதன் பின் இவ்வுலக வாழ்வானது அவனுக்கு அதாகவே துறக்கப் படுகிறது. அவன் துறக்கவில்லை.

அப்படி துறவிற்கு ஆளான பிறகு, அவன் இங்கேயேதான் இருக்கிறான் உடலின் இருப்பால். எல்லாமும் செய்கிறான் ஆனால் செய்வதில்லை.

தாமரை தண்ணீரில் இருக்கிறது ஆனால் தண்ணீரில் இருக்கவில்லை.

அதே போல்தான் இந்த துறவிற்கு ஆளானவனின் நிலை ஆகும்.

துறவு என்பது

இப்பிரபஞ்சத்தில் எப்போதுமே அவன் இல்லை என்பதும், இருக்கிறான் என்பதுவும்தான்.

அவன் இப்பிரபஞ்சத்தில் ஒட்டவே இல்லை என்பது நிதர்ஷனமான உண்மை.

இது இப்பிரபஞ்சத்திலிருந்து அவனுக்குக் கிடைத்த முக்தி ஆகும்!

துறந்தது துறந்ததுதான்!

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com