[:en]எனது ஆன்மிகம் – 67 ஆர்.கே.[:]
[:en]
கடவுள் புதிய உலகத்தைப் படைக்கிறார். அந்த உலகத்திற்கு சத்தியயுகம் என்று பெயரிடுகிறார். அங்கு நற்குணங்கள் உள்ள மனிதர்கள் தேவதைகளாக வாழ்வதாக சொல்கிறார். ஆக மனிதன் தேவனாகலாம் என்ற வழக்கச் சொல் உண்மையாகிறது. காலகாலமாக சொல்லி வந்த பரிணாம வளர்ச்சி மனிதனில் இருந்து தேவனாகலாம் என்ற கனவு நினைவு ஆகப் போகிறது.
இக்காரியத்தை அவர் எப்படிச் செய்கிறார். அதற்க்கு ஆதாரமாக மூன்று பெயரை தேர்வு செய்து, இக்காரியம் செய்யப்படுகிறது. பிரம்மா மூலம் படைத்தல், விஷ்ணு மூலம் காத்தல், சங்கரர் மூலம் அழித்தல் என்பதாக மூத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்பதைச் செய்கிறார்.
நண்பர்களே பிரம்மா என்றால் நான்கு தலையுள்ள ஒரு தேவனை நாம் பார்க்கிறோம். அதன் அர்த்தத்தை சிவ பரமாத்மா இப்போது தான் செல்கிறார். நான்கு தலை என்பது ஒரு குறிப்பு. பரமாத்மாவின் ஞானம் லேக்ராஜ் மூலமாக உலகின் நான்கு திசையிலும் பரவுவதைத்தான் பக்தியில் பிரம்மாவுக்கு நான்கு தலைகள் என்று சொல்லிவிட்டனர். உண்மையில் பிரம்மா என்ற குறிப்பு பெயரை தனது ஆதாரமான லேக்ராஜ் என்பருக்கு வைத்து, அவரின் உடலை ஆதாரமாகக் கொண்டு படைத்தல் என்ற தொழிலை செய்கிறார். எதைப் படைக்கிறார். நற்குணங்களை படைக்கிறார். மனிதர்களாகிய நமக்கு நல்ல குணங்களை ஏற்படுத்த இந்த ஞானத்தை லேக்ராஜ் என்ற பிரம்மா மூலமாக சொல்லித் தருகிறார்.
படைக்கப்பட்ட புதிய உலகம் சத்திய யுகத்தை, ஆதாவது வரப்போகிற சத்தியயுகத்தை விஷ்ணு மூலமாக ஆதாவது ஸ்ரீலெட்சுமி, ஸ்ரீநாரயணன் மூலமாக பாதுகாக்கிறார். ஸ்ரீலெட்சுமி, ஸ்ரீநாரயணன் புதிய உலகத்தின் ஆட்சியாளர்கள். படைத்த புதிய உலகம் அவர்களின் வாயிலாக பாதுகாக்கப்படுகிறது. சங்கரர் மூலமாக பழைய உலகம் கலியுகம் என்று சொல்லப்படுகிறது தற்காலத்தை அழிக்கிறார். ஆக படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூத்தொழிலை சிவபரமாத்மா இவ்வூலகத்திற்கு 1936 ஆம் ஆண்டு முதற்கொண்டு செய்து வருகிறார். கிட்டத்தட்ட 100 வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயத்தின் செயல்பாடுகள். கடவுள் நம்மை சந்திக்கும் காலநேரம் மொத்தம் 100 வருடங்களே, அதன் பிறகு புதிய உலகம், பழைய உலகம் அழிந்து வர இருக்கிறது. அதற்கான முஸ்தீபுகளை, அறிகுறிகளை உலகம் உணர்ந்து வருகிறது. ஆனால் கடவுளின் படைத்தல் குறித்து அறிந்துள்ளதா என்றால், இன்னும் முழுமையாக இல்லை என்று சொல்லலாம். ஆனால் மிகக் கூடிய விரைவில் அனைவருக்கும் அவரின் வருகையை உணர்ந்து கொள்வார்கள் என்று பரமாத்மா சிவன் சொல்கிறார். அதற்கு முன்பாக புதிய உலத்தில் உங்களின் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு பரமாத்மா சிவன் தரக் கூடிய இந்த தெய்வீக ஞானமும், இராஜயோகப்பயிற்சி மூலமாக உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ள கூடிய மாற்றத்தின் மூலமே அது சாத்தியம் ஆகும் என்கிறார்.
தொடரும் முந்தயபகுதி[:]