[:en]ஸ்டாலின்  திராவிட நாடு கோரிக்கை,  தமிழ்  தேசியத்திற்கு பதிலடியா?  –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

திராவிட நாடு கோரிக்கை 1962 ஆம் ஆண்டு கைவிடப்பட்டதாக,  இந்திய பாராளுமன்றத்தில்  அண்ணா அவர்களால் அறிவிக்கப்பட்டது.  ஆனால்  அதற்கான காரணிகள் இப்போதும் அப்படியே இருக்கிறது. ஒருகிணைந்த தேசத்தின் குரலாக தேசப் பாதுகாப்பின் காரணத்தை முன்னிட்டு திராவிட நாடுக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார்.

இப்போது மீண்டும் அக்கோரிக்கைக்கான தேவை வந்துள்ளது. அது குறித்து பரிசீலிப்போம் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை பிரச்னையில் மத்திய அரசின் பாரா முகம் மற்றும் காலதாமதம் ஆகியவை இந்த கோரிக்கைக்கு நம்மை தள்ளுகிறது என்று நினைத்துவிட்டாரா? அல்லது வளர்ந்து வரும் தமிழ்தேசியத்திற்கு ஒரு ஆப்பு அடிக்கும் முயற்சியாக இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறாரா? என்ற கேள்வி பிறக்கிறது.

திராவிட நாடு கோரும் ஸ்டாலின் முதலில் திராவிட நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கும் ஆந்திரா, கர்நாடக, கேரளாவுடன் எத்தகைய தொடர்பு நிலை தமிழக அரசுக்கு உள்ளது என்ற தெளிவுடன் பேசுகிறாரா? இல்லை இது எல்லாம் மக்கள் அறியாத விஷயங்கள்  என்று எண்ணிக்  கொண்டாரா என்பது குறித்த வினாவை அவருக்கே விட்டு விடுகிறோம்.

அண்டை  மாநிலங்களோடு கசப்பான உறவு நிலையே தமிழகத்திற்கு இன்றை நடைமுறையில் உள்ளது. அது கேரளாவுடன்  முல்லை பெரியாறு பிரச்னை,  ஆந்திராவுடன் செம்மரக் கடத்தல் விவகாரம்  மற்றும் கர்நாடகாவுடன் காவிரி பிரச்னை என்று முக்கிய பிரச்னைகளில் அவர்களுடன் ஒரு சுமுக உடன்பாடு எட்டப்படாத சூழ்நிலையில் அரசியலுக்காக திராவிட நாடு கோரிக்கையை எழுப்புவது  எந்த விதத்தில் நியாயம்.

அப்படியே பார்த்தாலும் திராவிட நாட்டையா தமிழர்கள் விரும்புகின்றனர் என்ற கேள்வி பிறக்கிறது. தமிழர்கள் தங்களுக்கான உரிமைகள் பறிக்கப்படும் போது, தமிழ் தேசியத்தைத்தான் கையில் எடுக்கிறார்கள். திராவிட நாட்டை அல்ல. இந்த இடத்தில் தான் ஸ்டாலின் பேச்சு சந்தேகத்திற்குரியதாக உள்ளது. காரணம் தமிழ்நாடு தனிநாடாகும்  என்று சொல்லி இருந்தால் அது புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.

அதைவிடுத்து, சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அக்கம் பக்கத்து ஆளையும், அவனுக்கு அதில் உடன்பாடு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறியாமல் திராவிட நாடு கேட்பது என்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

ஒருவேளை கேரளா, ஆந்திரா, கர்நாடக இக்கோரிக்கையை  ஆதரிக்கவில்லை என்றால். எது திராவிட நாடு என்ற கேள்வி வருகிறது. தமிழ்நாடு  மட்டுமே  திராவிட நாடா? அப்படித்தான் கழகங்கள் சொல்லி வருகின்றனவா? முதலில் திராவிடம் எது? தமிழ் தேசியம் எது என்ற புரிதலுக்கு வந்து பேசுவது நலம்.

உண்மையில் தமிழர் நலம் பாதிக்கப்பட்டால், தமிழ் தேசியம் கேட்பதே நடைமுறை சாத்தியம். அதைவிடுத்து  போகாத ஊருக்கு வழி சொல்லக் கூடாது. இது மத்திய அரசை மிரட்ட பயன்படக் கூடும் என்று நினைத்தார் போல. எப்படியோ மத்திய அரசு மிரளுமா? மிரளாதா என்பது  அது எடுக்கப்போகும் நடவடிக்கை பொறுத்தே தெரிய வரும்.

உண்மையில் கழகங்கள் இல்லா ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறும் பாரதி ஜனதா கட்சி மேல் உள்ள கடுப்பும்,  திராவிடர்கள்  50 ஆண்டு  கால ஆட்சியில் ஊழலால் தமிழ்நாட்டை பாழ்படுத்திவிட்டனர், ஆகையால் அவர்களுக்கு சம்பந்தமில்லாத தமிழ்நாட்டு தலைமைக்கு உரிமை கோருவது ஏற்புடையது அல்ல ஆக திராவிடர் கோஷம் போடுபவர்களை எதிர்போம் என்ற  தமிழ் தேசிய வாதிகளின் மேல் உள்ள கடுப்பாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஆக தமிழ், தமிழ் தேசியம் குறித்த கருத்தை பேசமால் தமிழ்நாட்டில் இனி அரசியல் பேச முடியாது என்ற சூழலை நோக்கி தமிழகம் போய் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com