இன்று பூமி நேரம்! ஒரு மணிநேரம் விளக்குகள் அணைத்து வைப்பு

Advertisements

பூமி நேரத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மின் விளக்குகளை ஒரு மணிநேரம், இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகளை நோக்கி மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அனுசரிக்கப்படுவது தான் பூமி நேரம்(Earth Hour).
இன்றைய தினத்தில் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒருமணிநேரம் நிறுத்தி வைப்பார்கள்.
முதன் முதலில் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்விற்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து உலகம் முழுவதும் வருடா வருடம் பூமி நேரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
குறித்த திட்டத்தை இயற்கைக்கான உலகளாவிய நிதியமைப்பு(WWF) முன்னெடுத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை படிக்க
43டிஸ்லைக்

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com