இருமையில் ஓரம் சாராது நடுவு நின்று யோகி ஆவாய்:-கிருஷ்ணா.

Advertisements

இக்கணத்தில் வாழுங்கள்:-புத்தா.

நிகழ்காலத்தில் வாழுங்கள்:-பகவான் ஓஷோ.

இவர்கள் சொல் தவறாகுமா?

ஒருக்காலும் ஆகாது!

ஆனால் நிகழ்காலம் என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் உள்ள கால அளவு அல்ல!

காலம் என்பது,

“ஒரு குறிப்பிட்ட செயல் செய்து முடிக்கப்பட எடுத்துக் கொள்ளப்படும், விரல் சொடுக்குகளின் இரண்டிற்கு இடையே உள்ள தூரமே ஒரு ‘வினாடி’ என்ற அளவினால் அளக்கப்படும் ஒரு யூனிட்” ஆகும்.

இரண்டு சொடுக்குகளில் ஔி 1,60,000 கி.மீ. பயணிக்கிறது.

இரண்டு சொடுக்குகளில் பாதி நேரத்தில் கண் இமைக்கப்படுகிறது.

ஆக

காலம் கணக்கிடப்படுவது என்பது, ‘ஒரு செயலை அடிப்படையாக வைத்தே’ கணக்கிடப்படுகிறது.

செயலின்றி காலத்திற்கு என்று தனி இருப்புக் கிடையாது!

பின்பு

இந்த மகா புருஷர்கள், எதை நிகழ்காலம் என்கிறார்கள்?

ஒரு நீள கோடு வரைந்து கொண்டு, அதன் நடுவே ஒரு புள்ளி வைத்து, புள்ளிக்கு இடது புறம் கடநத காலமாகவும்; வலது புறம் எதிர்காலமாகவும் வைத்துக் கொண்டால்; அந்த நடுப்புள்ளிதான் நிகழ்காலமாக தோற்றத்தில் இருக்கும்.

ஆனால் கடந்த காலமும், எதிர் காலமும் அந்தப் புள்ளியை சமமாக பங்கிட்டுக் கொள்வதால்; நிகழ் காலத்திற்கு அங்கே இடமில்லை!

இப்போது…

செயலை ஆதாரமாகக் கொண்டே காலம் வாழ்வதால்;

“செயலின்மை” காலத்தைக் கொன்றுவிடுகிறது!

காலக்கோட்டின் மையப்புள்ளிக்கு இரு புறமும் செயல்களால் அர்த்தப்படுத்தப் படும் கடந்த காலமும், எதிர்காலமும் இருப்பதால்; அதன் மையம் செயலற்றதே*

“இயற்கையின் எந்த செயல்படும் சுழற்சியிலும் அதன் மையம் செயலற்ற அமைதித் தன்மை கொண்டிருக்கும்.

உ-ம்:-

சக்கரத்தின் மையம், புயலின் மையம் போன்றவைகள்

செயலுக்கு அச்சாணியாக இருப்தோடு அமைதியாகவும் இருக்கிறது.

அதுபோல

நமது உடலும், மனமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

அதன் மையம் இங்கே கண்டு பிடிக்கப்பட வேண்டும்.

கோட்டின் மையப்புள்ளி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

கடிகாரத்தின் ஊசல் குண்டு போல இடது மற்றும் வலது என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் மனதை ஒரு குறிப்பிட்ட நேரம்(மூன்று நாழிகை) பிடித்து நிறுத்த முடிந்தால்;

மனம் அந்த நடுப்புள்ளியில் நிற்க ஏதுவாகிறது!

அப்படி அந்த நடுப்புள்ளியில் மனம் லயித்த பிறகே நமக்குப் புரிய வருகிறது-

அது புள்ளி அல்ல! காலத்தின் *துவாரம், ஓட்டை* என்று!

மனம் அந்த ஓட்டையில் நிதானித்த மறு வினாடியே;

“அந்த ஓட்டைவழியாக பீறிட்டு முடிவில்லாத வெட்ட வெளிக்குள் நாலாபுறமும் வியாபித்துவிடுகிறது”.

இந்த மனதின் வியாபித்த செயல், மீண்டும் அந்த ஓட்டை வழியாக பழைய நிலைக்கு திரும்பவே முடியாது.

அதாவது

மனம்

*முடிவில்லாத நிகழ்காலத்திற்குள் நுழைந்துவிட்டது*

இங்கு செயல் இல்லை.

மாபெரும் தவத்தின் மூலம் யோகி ஆகிவிடுவதும், புத்தர் ஆகிவிடுவதும், சாட்சி ஆகிவிடுவதும் இப்படித்தான்.

You may also like...

Leave a Reply