இந்த ஔி இருக்குல்ல
…
அது கல் மீது பட்டவுடன், ஔியானது தன் பொலிவை இழந்து, கல்லாக காட்சியாகிறது!
இலை மீது பட்டவுடன் இலையாக காட்சியாகிறது!
ரசம் பூசப்பட்ட ஆடியில் பட்டவுடன், ஔியாகவே அப்படியே காட்சியாகிறது!
தமோ குணத்தவரிடம் எடுத்துரைக்கப்படும் எந்த விளக்கங்களும், அவரது குணமான கல் போன்றே விளங்கப்பட்டு விளக்கப் படுவதாகின்றது.
ரஜோ குணத்தவரிடம் விளக்கப்படும் விளக்கங்கள் யாவும், அப்படியே திருப்பி விடப்பட்டு, தானும் பயன்பட்டு, பிறருக்கும் பயன்தர ஏதுவாகிறது! இவர்களே கற்ற பண்டிதர்கள் ஆவார்கள்!
இனி,
சத்துவ குணமே உருவான ஞானியரிடம், விளக்கப்படும் விளக்கங்கள் யாவும்…
பட்டை தீட்டப்பட்ட வைரமானது தன் மீது பட்ட ஔியை, திக்கெட்டிலும் ஔி- ஜாலங்களாக மெறுகேற்றி ஔியை இன்னும் அழகாக்கி பிரதிபலிப்பது போல்…
தனக்கு கிடைத்த சாதாரண விளக்கங்களை, விளக்க ஜாலங்களாக மாற்றி…
சமூகத்தில் எத்தகைய அறிவுடையோரையும், ஏதாவதொரு பாங்கில் விளக்கமுற வைத்து விடுகின்றனர்!
தன்னைத்தானே பட்டை தீட்டிக் கொண்டவர்களே ஞானியர் ஆகும்!
இப்படியாக…
பிறப்பின் நோக்கமே தன்னைத்தானே பட்டை தீட்டிக் கொள்வது என்பதாம்!