[:en]லண்டன் போராட்டத்தில் தேசியக்கொடி கிழிப்பு இந்தியாவிடம் இங்கிலாந்து மன்னிப்பு கேட்டது[:]

Advertisements

[:en]


லண்டன் போராட்டத்தில் தேசியக்கொடி கிழிப்பு இந்தியாவிடம் இங்கிலாந்து மன்னிப்பு கேட்டது

லண்டன்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றிருந்த நிலையில், இந்தியாவில் காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டது, உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை பா.ஜனதா எம்.எல்.ஏ. பலாத்காரம் செய்ததாக எழுந்து உள்ள புகார், தொடர்ந்து பரவலாக பல இடங்களிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்செயல்கள் நடந்து உள்ளதை கண்டித்து இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் மோடியின் கார் சென்ற பாதையான டவுனிங் வீதி மற்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கம் அருகே பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது இந்தியாவின் தேசியக்கொடியும் கிழித்து எறியப்பட்டது. இது குறித்து இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்தியா மிகுந்த வேதனை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து இந்திய தேசியக்கொடி புதிதாக நிறுவி பறக்கவிடப்பட்டது.

எனினும் நடந்த சம்பவத்துக்காக இங்கிலாந்து அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர்.

இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘‘அமைதியான வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க மக்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்ற சதுக்க போராட்டத்தின்போது நடந்த சம்பவம், ஏமாற்றத்தை அளித்து உள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதர் யஷ்வர்த்தன் குமார் சின்காவை தொடர்புகொண்டோம். இந்திய பிரதமரின் இங்கிலாந்து வருகை, இந்தியாவுடனான எங்கள் உறவை வலுப்படுத்தி உள்ளது. இரு தரப்பும் இன்னும் அதிகமாக இணைந்து செயல்பட முடியும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என குறிப்பிட்டார்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com