[:en]வளர்ந்து வரும் தமிழ் தேசியம், அஞ்சி நடுங்கும் திராவிடம் –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

 

தமிழகத்தில் தொடர்ந்து வரும் பல்வேறு பிரச்சனைகளில் பல்வேறு அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகள் தங்கள் கருத்துக்களையும், போரட்டங்களையும் முன்னேடுத்து வரும் வேளையில் தற்போது தமிழ் தேசியமா? திராவிடமா? என்ற கொள்கை சிந்தாந்தத்தின் அடிப்படையில் போராட்டங்களும், கருத்து வீச்சுக்களும்  சமூக ஊடகங்களிலும்,  தொலைக்காட்சி விவதாங்களிலும் பிரதான தலைப்புகளில் இடம் பெற்று வருகிறது.

50 ஆண்டு கால திராவிட ஆட்சியில், திராவிடத்தால் சாதித்தது என்ன என்பதை திராவிட கட்சிகள் பட்டியிலிட்டு வருகின்றன. அதே நேரம் திராவிடத்தால் வீழ்ந்தோம். திருட்டு திராவிடம் எங்களை படுகுழியில் தள்ளியுள்ளது. வேற்று மொழி பேசும் ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றி வஞ்சகம் செய்துள்ளார்கள். அவர்களின் துரோக அரசியலை ஒழிப்பதே எங்கள் முழு முதற் வேலை என்று வீறு கொண்டு கிளம்பி உள்ளனர் பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகள்.

உதாரணத்திற்கு காவிரி நதி நீர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டிற்கு எதிராக ஒற்றைப் புள்ளியில் போராட்ட களங்களை நிர்ணயித்து தங்கள் எதிர்ப்புகளை செய்து வருகின்றனர் திராவிடம் பேசும் கட்சிகளும், தமிழ் தேசியம் பேசி வரும் கட்சிகளும், அமைப்புகளும்.

இதில் காவிரி நதி நீர் வேண்டி திராவிட பேசும் கட்சிகள் கல்லணையில் இருந்து கடலுர் வரை பாதையாத்திரை பயணத்தை நடத்தி நிறைவு செய்து இருக்கிறார்கள். அதே கால கட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடத்தக் கூடாது என்று தமிழ் தேசிய பேசி வரும் நாம் தமிழர் கட்சி,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள்  தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் மணியரன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழு என்ற பெயரிலும் மற்றும் கட்சி சாரா தமிழ் அமைப்புகள்,  தமிழக கலை, இலக்கிய, பண்பாட்டுப் பேரவை சார்பாக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டக் களம் கண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சென்னையில் இருந்து புறமுதுகிட்டு புனேக்கு ஓட்டம் காண செய்து, மாபெரும் வெற்றியை காவிரி நதி நீர் போராட்ட களத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள்.

இது 50 ஆண்டு கால திராவிட கட்சிகள் எடுத்த முன்னேடுப்பைக் காட்டிலும் கூடுதலாக கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது,  தமிழ் தேசிய அமைப்புகளின் வளர்ச்சி விகிதிம் கூடுதலாகவும் ஆகியுள்ளது.  இதே  தமிழ் தேசிய அமைப்பினர் திருச்சி கல்லணையில் 27/4/2018  காவிரி நதி நீரிருக்காக ஒன்று கூடி  போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இத்தகைய அரசியல் நகர்வுகள் ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளிடத்தில் குறிப்பாக திராவிடம் பேசும் கட்சிகளிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கட்சியாக நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மேல் பல்வேறு பிரிவுகளில் வழக்கு, கைது நடவடிக்கை என்று காட்டமாக பாய்வதில் இருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது. அச்சுறுத்தலால் அவர்கள் அடிபணிய போவதில்லை.  அடக்கு முறைகள் அவர்களை இன்னும் உரமேற்றுமே ஒழிய,   ஆட்சியாளர்களின் நோக்கம் நிறைவேறப் போவது இல்லை.

திராவிடம் பேசும் ஆளும் கட்சியும், திராவிடம் பேசும் எதிர்க்கட்சியுமே இதில் ஒத்திசைவாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. திராவிடத்தால் பயன் பெற்றவர்கள் அவர்களே. மக்கள் இன்றும் தங்கள் வாழ்வாதார நிலை உயர்வு பெறாமல் எல்லா வளங்களையும் அன்னிய கைக்கூலிக்களாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொடுங்கோன்மைக்கு ஆட்பட்டு சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

தமிழ் இன  உணர்வு,  மொழி உணர்வு இப்போதுதான் எப்போதும் இல்லாத வகையில் மேலுங்கி வருகிறது. குறிப்பாக இளைஞர் சமூகத்தில், அதை அதிக வீச்சோடு பார்க்க முடிகிறது. ஊழலில் திளைத்து ஊறிப்போன திராவிடங்கள் கூடிய விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் காலம் கனிந்து வருகிறது. இவர்களின் பித்தலாட்டங்கள் நாள்தோறும் அம்பலமாகி வருகிறது. இதை இளைய சமூகம் நன்கு உணர்ந்து, இனம் சார்ந்து, மொழி சார்ந்து தங்கள் அரசியலை கட்டமைக்க வேண்டிய கடமையை உணர்ந்து அதற்கு ஆதரவையும், தங்கள் களப்பணியையும் ஆற்றி வருகிறார்கள்.  இதைக்  கண்டு  ஆத்திரப்படுகிறது திராவிடம். அஞ்சி நடுங்குகிறது திராவிடம்.  அங்காலயங்கிறது திராவிடம்.  திராவிடம் அதன் கடைசி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com