[:en]நற்சிந்தனை[:]

Advertisements

[:en]

 

இன்றைய சிந்தனைக்கு

பாராட்டு:

நம்முடைய அதிருஷ்டத்தை நாம் பாராட்டும்போது மட்டுமே நம்மால் அவற்றை திறம்பட பயன்படுத்த முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் அடைந்த அதிருஷ்டத்தை நாம் அதிகமாக பாராட்டும்போது, நாம் அவற்றை அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை இரசிப்போம். நம்முடைய வளங்களை மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளும்போது, அவை அதிகமாக நம்மிடம் திரும்ப வருவதை நாம் காண்கின்றோம்.

செயல்முறை:

நாம் திறமைகள் மற்றும் தெய்வீக குணங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். என்னை நான் அதிர்ஷ்டசாலியாக கருதுவதை பற்றி அனைத்து வழிகளிலும் சிந்திப்பது அவசியமாகும். அவற்றை நான் பாராட்டுவதற்கு கற்றுக்கொள்ளும்போது, நான் எதையாவது அதிகமாக எதிர்பார்ப்பதை நிறுத்திவிடுவேன். அதன்பிறகு, என்னிடம் இருப்பதை சிறப்பாக என்னால் பயன்படுத்திக்கொள்ள முடிவதோடு என்னுடைய நன்மைக்காகவும் மற்றவர்களுடைய நன்மைக்காக என்னுடைய அதிருஷ்டத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்த ஆரம்பிக்கின்றேன்.[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com