நற்சிந்தனை – சந்தோஷம்
இன்றைய சிந்தனைக்கு
சந்தோஷம்:
செயல்களும், மனோபாவங்களும் தூய்மையாகவும் தன்னலமற்றதாக இருக்கும் ஒருவருக்கு சந்தோஷம் அனுபவமாகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்முடைய செயல்கள் தூய்மையாகவும் தன்னலமற்றதாகவும் இருக்கும்போது, எந்தவித எதிர்மறையானதன்மையின் சுவடும் இருக்காது. எதிர்மறைதன்மையின்றி, மனம் குற்றஉணர்வு, பயம் மற்றும் கவலையிலிருந்து இயற்கையாகவே விடுபட்டு இருக்கின்றது. நாம் தொடர்ந்து சந்தோஷமான நிலையை அனுபவம் செய்கின்றோம்.
செயல்முறை:
என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தோஷமின்றி இருப்பதை காணும் போது, எது என்னை சந்தோஷமாக ஆக விடாமல் தடுக்கிறது என்பதை ஆழமாக சிந்தித்து பார்ப்பது அவசியமாகும். என்னுடைய எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களை பற்றி சிந்திப்பதோடு எனக்கும், என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நன்மை தரும் என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் செய்வது அவசியமாகும். இதை நான் செய்தால், தொடர்ந்து நான் சந்தோஷத்தை அனுபவம் செய்வதை காண்பேன்.