நற்சிந்தனை – கருணை

Advertisements

 

இன்றைய சிந்தனைக்கு

கருணை:

கருணை என்பது மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மற்றவர்களுக்காக நான் கருணை கொண்டிருக்கும்போது, மற்றவர்களிடம் உள்ள தவறுகளை பற்றியோ அல்லது பலவீனங்களை பற்றியோ பேசமாட்டேன். அவ்வாறான விஷயங்களை பற்றி நான் பேசும்போது, ஒருவரிடமிருந்து அது மற்றவருக்கு பரவுகின்றது. பேசுவதற்கு பதிலாக, அவற்றை அன்புடன் எனக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மற்றவர்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்கி, அவர்கள் முன்னேற உதவுகின்றது.

செயல்முறை:

ஒருவரிடம் உள்ள ஒரு பலவீனத்தை நான் கவனிக்கும்போது, மற்றவர்களிடம் அதை பற்றி பேசுவத்தில் கவனத்தை செலுத்துவதற்கு பதிலாக, அந்த நபரிடம் உள்ள நேர்மறையான குணத்தில் கவனம் செலுத்துவதில் விசேஷமாக முயற்சி செய்வது அவசியமாகும். அந்த நபரின் நற்குணங்களை பற்றி நான் சிந்திக்கும்போது, அவர்களிடம் என்னுடைய அன்பு அதிகரிக்கும். அவர்களுடைய பலவீனங்கள் எதுவாகிலும் அவர்களை நேர்மறை+யான கண்ணோட்டத்தில் என்னால் பார்க்க முடியும்.

 

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com