நற்சிந்தனை – நம்பிக்கை

Advertisements

 

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை:

நம்பிக்கையானது உண்மையிலிருந்து வளர்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

யாரை நம்புவது என கற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கலாம். கடந்தகாலத்தில் நம்முடைய நம்பிக்கையை ஏமாற்றிய மனிதர்களிடமிருந்து நமக்கு கெட்ட அனுபவங்கள் இருக்கும்போது, மற்றவரைகளை நம்புவது கடினமாக இருக்கலாம். மறுபடியும் யாரையும் நம்புவதற்கு கற்றுக்கொள்ள சில காலம் எடுக்கலாம்.

செயல்முறை:

நம்பிக்கை இரண்டு விதத்தில் வேலை செய்கின்றது. ஒருவருடைய நம்பிக்கையை நான் பெற விரும்பினால், அவர்கள் என்னை நம்புவதற்கு முன்னரே நான் அவர்களை நம்புகின்றேன் என்பதை நான் காண்பிக்க வேண்டும். நான் உண்மையாக இருக்கும்போது, நான் பேசுகின்ற மற்றும் செய்கின்ற அனைத்து காரியங்களும் அதற்கு சாட்சியாகும். மற்றவர்கள் இதை உணரும்போது, அவர்கள் என்னை நம்ப ஆரம்பிப்பார்கள். நம்பிக்கையிலிருந்து அன்பு வளர ஆரம்பிக்கும்.

 

You may also like...

Leave a Reply