நற்சிந்தனை – நேர்மறைதன்மை
நேர்மறைதன்மை:
கேள்விகளிலிருந்து விடுபட்டிருப்பது என்பது பறப்பதற்கான ஆற்றலை கொண்டுவருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, தேவையற்ற கேள்விகளை நம்முடைய மனதில் உருவாக்கும் போக்கு நம்மிடம் உள்ளது. இவ்வீணான எண்ணங்கள் நம்முடைய மனதை எதிர்மறைதன்மையால் நிரப்பி, நம்முடைய சக்தியை நாம் இழக்குமாறு செய்கின்றது. அந்நேரத்தில், இவ்வித எண்ணங்களை கொண்டிருப்பது இயற்கையானது என்று எண்ணி, இவ்விதமான கருத்துகளில் நாம் சிக்கிக்கொள்கின்றோம். இதனால் ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கு நாம் இடமளிப்பதில்லை.
செயல்முறை:
நான் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, “ஏன்” அவ்வாறு நடந்தது என்பதில் நான் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதற்கு பதிலாக பறப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும். என்னை வலுப்படுத்திக்கொள்ளும் வழியை கண்டுபிடிப்பது அவசியமாகும். அதனால் நான் சூழ்நிலையை விட வலிமையுடைவர் ஆகுகின்றேன்; அதனால் என்னால் சூழ்நிலைக்கு மேலே பறக்க முடியும். அதன்பின் சூழ்நிலை சிறிதாக தென்படுவதுடன் என்னால் சுலபமாக வெற்றிகொள்ள முடியும்.