நற்சிந்தனை – மௌனம்

Advertisements

மௌனம்:

சாந்தமாக இருப்பதென்றால் உறவுகளை உருவாக்குவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒருவரை பற்றி ஏதாவது ஒன்று நமக்கு பிடிக்காதபோது, எதிர்மறையாக பேசுவதும் சூழ்நிலையை எதிர்த்து செயல்படுவதும் கோபப்படுவதும் சுலபமானது. மற்றவர் இயற்கையாகவே நம்முடைய எதிர்மறையான எண்ணங்களுக்கு எதிர்மறையாக பதிலளிக்கின்றார். அதன்பின், பெரும்பாலும் நேர்மறையான உறவுகளை வளர்க்க முடியாமல் போகின்றது.

செயல்முறை:

எந்தவொரு உறவுமுறைகளிலும் ஏதாவது தவறாக போகும்போது, முதலில் நான் செய்ய வேண்டியது மௌனமாக இருப்பதாகும். இதை நான் செய்யும்போது, அந்நேரத்தில் சூழ்நிலையின் எதிர்மறையானவற்றிலோ அல்லது அந்த நபரினுடைய எதிர்மறையான அம்சங்களிலோ சிக்கிக்கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக அந்த நபரிடம் உள்ள அழகான தன்மையை என்னால் பார்த்து அதை பாராட்ட முடிவதோடு, அந்த நபரின் தனித்துவமான குணத்துடன் தொடர்புகொண்டு நேர்மறையான சூழலை உருவாக்குவதால், அது உறவை மீண்டும் வளர்க்க உதவுகின்றது.

You may also like...

Leave a Reply