நற்சிந்தனை – சுய-கட்டுப்பாடு

Advertisements

இன்றைய சிந்தனைக்கு

சுய-கட்டுப்பாடு:

ஆசைகளிலிருந்து விடுபட்டிருப்பது என்பது அனைத்து பிராப்திகளிலும் முழுமையுடையவராக ஆகுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, நாம் பெரிய ஆசைகளிலிருந்து விடுபட்டு இருந்ததாலும், பெரும்பாலும் நமக்கு சின்னஞ்சிறு ஆசைகள் நிறைய இருக்கின்றன. அவை சிறியதாக இருந்த போதிலும் அவை நம்முடைய நல்வாழ்வில் குறிப்பிடும்படியான பாதிப்பை கொண்டுள்ளது: இந்த சின்னஞ்சிறு ஆசைகளால் நம்மால் வாழ்க்கையினுடைய அனைத்து பிராப்திகளையும் சந்தோஷமாக அனுபவம் செய்ய இயலவில்லை.

செயல்முறை:

ஆசைகளை பின் தொடர்வது என்பது என்னுடைய சொந்த நிழலை பின் தொடர்வதாகும் என என்னுள் சொல்லிகொள்வது அவசியமாகும்: நான் அதிகமாக அதை தொடர முயற்சிக்கும்போது, அவை மென்மேலும் என்னிடமிருந்து தூரமாக செல்கின்றது. அவற்றை விட்டுவிட்டு, சூரியனை(என்னுடைய இலக்கை) நோக்கி நகர்வதே நான் செய்ய வேண்டியதாகும். அதன்பின் என்னுடைய நிழல் என்னை தொடர்வதுடன் நான் திருப்தியாகவும் நிறைவுடன் இருப்பதியும் உணர்வேன்.

 

You may also like...

Leave a Reply