நற்சிந்தனை – ஆசிர்வாதங்கள்

Advertisements

 

இன்றைய சிந்தனைக்கு

ஆசிர்வாதங்கள்:

“ஒவ்வொரு அடியிலும் ஆசிர்வாதங்களை சேர்ப்பவரே சுலபமாக வெற்றி அடைகின்றார்.”

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் ஒரு லட்சியத்தை நோக்கி பணியாற்றும்போது, சில சமயங்களில், நாம் அதன் மீது மிகவும் கவனமுடையவராக ஆகும்போது நம்மை சுற்றி உள்ளவர்களை நாம் மறந்துவிடுகின்றோம். நாம் துவங்கியதை சாதிக்கும் அதே வேளையில் பெரும்பாலும் மற்றவர்களுடைய உணர்வுகளை புண்படுத்தி விடுகின்றோம், நம்முடைய உறவுமுறைகளும் சேதமடைகின்றன.

செயல்முறை:

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஆசிர்வாதங்கள் என்ற வலிமையான தூணின் ஆதரவு உள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும் எத்தனை மனிதர்களை சிரிக்க வைக்கின்றேன் என சோதிப்பதோடு நான் கவனித்து கொள்பவர்களை சந்தோஷமாக ஆக்குவதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என சிந்திப்பது அவசியமாகும். இது மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு அதிக கவனம் கொடுப்பவராக ஆக்க உதவுவதோடு அவர்களுடைய ஆசிர்வாதங்களையும் நல்லாசிகளையும் தொடர்ந்து பெறுவதற்கு எனக்கு உதவுகிறது.

You may also like...

Leave a Reply