நற்சிந்தனை – சுதந்திரம்
இன்றைய சிந்தனைக்கு
சுதந்திரம்:
பூரணத்துவத்திற்கான ஒரு ஆசை, மற்ற அனைத்து ஆசைகளையும் முடித்துவிடுகிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்முடைய வாழ்க்கை முழுவதுமாக ஆசைகளால் நிறைந்துள்ளது. ஒரு ஆசை பூர்த்தியானவுடன், வேறு பத்து ஆசைகள் ஒருபோதும் முடிவுபெறாத சுழற்சியாக தொடர்கிறது. நம்முடைய ஆசைகள் பூர்த்தியாகாத போது நாம் பாதிப்படைவது அல்லது வருத்தப்படுவது போன்ற போக்கு உள்ளது. ஆயினும், பெரும்பாலும், நாம் அவற்றை தொடர்ந்தும் நியாப்படுத்துகின்றோம். அதன்பிறகு வாழ்க்கை முழுவதும் எதிர்பார்ப்புகளால் நிறைந்து ஏமாற்றம் தொடர்கிறது. நாம் நம்முடைய ஆசைகளுக்கு அடிமையாகின்றோம்.
செயல்முறை:
பூரணத்துவத்திற்கான ஆசை, அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆற்றலை கொண்டுவருகிறது. பூரணத்துவத்தை கொண்டுவருவதில் மனம் மும்முரமாக இருப்பதால், அங்கு எதிர்மறையானவற்றுக்கு நேரமில்லை. நான் என்ன பெற வேண்டும் என்பதை பற்றி இனி மேற்கொண்டு நான் சிந்திக்கவில்லை. ஆனால் தொடர்ந்து, நான் கற்றுக்கொள்வதினால் அடைந்த ஞானத்தின் மூலம் லாபமடைகின்றேன். அதன்பிறகு, நான் மற்ற அனைத்து ஆசைகளிலிருந்தும் விடுபடுவதுடன், முன்னேற்றத்தை அனுபவம் செய்கின்றேன்.