நற்சிந்தனை – விழிப்புணர்வு

Advertisements

இன்றைய சிந்தனைக்கு

விழிப்புணர்வு:

ஓர் உயர்வான உணர்வு செய்யப்படுகின்ற காரியத்திற்கு விஷேசதன்மையை கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், விசேஷமான காரியத்தில் நாம் ஈடுபட்டிருக்கும்போது, தனக்கு அல்லது மற்றவர்களுக்கு நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான உணர்வுகளினால் நம்முடைய உணர்வுகள் சாதாரணமானதாக ஆகிவிடும் போக்கு உள்ளது. அவ்வித எண்ணங்கள் மிகவும் விசேஷமான காரியத்தை கூட சாதாரண ஒன்றாக மாற்றி விடுகின்றது.

செயல்முறை:

என்னுடைய உணர்வு (அல்லது ஒன்றை பற்றி நான் எவ்வாறு உணர்கின்றேன்) நான் செய்வதை பாதிக்கின்றது என்பதை நான் புரிந்துகொள்வது அவசியமாகும். அதை குறித்து நான் எதிர்மறையாக உணர்ந்தால், நான் உருவாக்குவதின் தரம் குறைந்து விடுகின்றது. “நான் படைப்பாளி” அல்லது “நான் சந்தோஷமாக இருக்கின்றேன்”, அல்லது “இந்த காரியம் அனைவருடைய நன்மைக்காக” என விசேஷமான உணர்வில் ஒவ்வொரு காரியத்தையும் நான் சிந்தித்து தொடங்கும்போது, என்னால் முழு விழிப்புணர்வில் அக்காரியத்தை செய்துகொண்டிருக்கின்ற அனுபவத்தை பாராட்ட முடிகிறது. இது என்னால் முடிந்தளவு அக்காரியத்தை சிறப்பாக செய்வதற்கு என்னை அனுமதிக்கிறது.

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com