நற்சிந்தனை – இனிமை

Advertisements

இனிமை:

இனிமை என்பது அனைத்திலும் உள்ள நல்லவற்றை பார்கின்ற திறன் ஆகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒவ்வொரு சூழ்நிலையின் ஆழத்திலும் ஏதோவொரு நன்மை இருக்கிறது. உள்ளுக்குள் பார்த்து அதை கண்டுபிடிப்பதற்கு சிறிதளவு பொறுமையே தேவைப்படுகிறது. நடந்துகொண்டிருப்பவைக்கு பின்னால் உள்ள இரகசியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்போது, இது நம்முடைய வாழ்வில் இனிமையை கொண்டுவருவதோடு, நம்மை லேசானதன்மையோடு முன்னோக்கி செல்ல வைக்கின்றது.

செயல்முறை:

சில சூழ்நிலைகள் பார்ப்பதற்கு எதிர்மறையாக இருக்கும் போதிலும், நான் சிரமப்பட்டு மேன்மேலும் உற்று பார்க்கும்போது, பொதுவாக அச்சூழ்நிலையில் மறைந்துள்ள இனிமையை என்னால் காண முடியும். குறிப்பிட்ட சூழ்நிலையில் உள்ள எந்தவொரு நல்லதையும் என்னால் பார்க்க முடியாதபோது, சரியான நேரத்தில் அது வெளிப்படும் என்ற நம்பிக்கையை நான் கொண்டிருப்பது அவசியமாகும். மேலும் எது நடந்தாலும் அது நன்மைக்கே ஆகும். இந்த பயிற்சி வாழ்க்கையிலுள்ள இனிமையை இரசிப்பதற்கு எனக்கு உதவுகிறது.

You may also like...

Leave a Reply