10 சதவீத இடஒதுக்கீடு நியாயமா? – ஆர்.கே.

Advertisements

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முதல் முறையாக இந்தியாவில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இது நியாயமா? அநியாயமா? என்ற விவாதம் தமிழகத்தில் நடந்து வருகிறது.

பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் சொல்லப் போனால் அனைத்து எதிர்க்கட்சிகளும், சிலரை தவிர்த்து இச்சட்டத்தை வரவேற்றுள்ளனர். இதற்கு காரணம் வடமாநிலங்களில்  அதிக  அளவிலான முற்படுத்தப்பட்ட மக்கள் இருப்பதாகவும், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களின் வாக்கு வங்கி தங்களுக்கு கிடைக்காமல் போகும் என்பதாலும், சத்தம்போடாமல் இருப்பதாக கூறுகிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் இச்சட்டத்தை ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன.

இடஒதுக்கீட்டிற்காக தமிழகத்தின் குரலால் , இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பாக 1950 ஆம் ஆண்டு  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கொண்டு வரப்பட்டது. ஆகையால் இவ்விசயத்தில் முன்னோடி மாநிலமான தமிழகம் இது தவறான முடிவு. முற்படுத்தப்பட்டவர்களுக்கான இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு வரப்போகும் காலங்களில் இடஒதுக்கீடு கொள்கையையே நீர்த்துப்போக வைக்கும் செயல். பொருளாதாரத்தில் பின்தங்கிய என்கின்ற விசயம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. ஆகையால் இதை கொண்டு வருவது பொருத்தமானது அல்ல என்கின்றனர்.

பொருளாதாரம் மாறக்கூடியது அதை அளவுகோலாகவும் எடுத்துக் கொள்ள முடியாது என்கின்றனர்.

இருந்த போதும் நெடுநாள் கோரிக்கையான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான முற்பட்ட வகுப்பினருக்கு இந்த இடஒதுக்கிடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்கின்றனர். இவ்விட ஒதுக்கீட்டை அந்த அந்த மாநில அரசுகள் அவர்களின் மாநில பொருளாதார பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு நிச்சியத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். மத்திய அரசு வேலைகளில் 8 லட்சம் மற்றும் 5 ஏக்கர் நிலம் என்பது பின்தங்கிய நிலையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இவ்வியத்தில் முடிவெடுக்க துணை முதல்வர் தலைமையில் ஒரு சர்வ கட்சிக்  கூட்டம் நடத்தப்பட்டது. அதில்  கலந்து கொண்ட 23 கட்சிகளில் 16 கட்சிகள் இதற்கு எதிராகவும், பாஜக. காங்கிரஸ், அதிமுக மற்றும் இகம்யூனிஸ்டு போன்ற சில கட்சிகள் ஆதரவாகவும் பேசியுள்ளனர். சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகு அரசு தனது முடிவை அறிவிப்பதாக அறிவித்துள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு 69 சதவீத இடஒதுக்கிட்டை எந்த அளவிலும்  பாதிக்காது என்பது மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆகையால் இதில் எதிர்பதற்கு என்ன உள்ளது? சந்தேகத்தின் பேரில் எதிர்பது என்றால் அது உள்நோக்கமானது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. அதே நேரம் இட ஒதுக்கிடு எல்லா இடங்களிலும் சரியாக அமல்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய ஒரு அமைப்பை அரசு அமைக்க வேண்டும். வட மாநிலங்களில் பல உயர் பதவிகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. பல கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் இல்லை. இதை என்னவென்று சொல்வது?

இட ஒதுக்கீட்டின் நோக்கமே சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காகத்தான் ஏற்பட்டுள்ளது என்றால்,  முற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக மாறும் நிலையில் அவர்கள் சமூகத்தில் பின்தங்கியவர்களாக மாறும் நிலை ஏற்படும். சமூக சமநிலை என்பது இருக்காது. ஆக இடஒதுக்கீட்டின் நோக்கம் சரி என்றால் அனைவருக்கும் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருப்பதே சரி. ஆகையால் இதை நாங்கள் வரவேற்கிறோம். ���.��

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com