அஷ்டமா சித்து

Advertisements

அட்டமா சித்து வரிசையில் பிராகாமியம் என்னும் கூடுவிட்டு கூடுபாயும் சக்தி ஒரு விந்தையான ஒன்றாகும்.

கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்றாலே பளிச்சென்று நம் ஞாபகத்திற்கு வரும் ஒரு நபர் விக்ரமாதித்தன் தான்.

விக்கிரமாதித்தன் கதை ஒரு புனைக்கதை. அது உண்மை கிடையாது என்று கூறும் சிலரும் உண்டு

இல்லை ..அவன் காடாறு மாதம் நாடாறு மாதம் ஆண்டது உண்மை. அவன் ஒரு அதிசய அரசன் அவனது சாகசங்கள் உண்மையானவை என்பாரும் உண்டு.

எது எப்படியோ.

விக்ரமாதித்தன் அஷ்டமாசித்துக்களில் ஒன்றான பிராகாமியம் என்னும் கூடு விட்டுக்கூடு பாயும் வித்தை தெரிந்தவன் என்றே வைத்துக் கொண்டு அவனை பார்க்கும் போது அவன் நிறைய சிந்திக்க வைக்கிறான்

இந்த வித்தையை ஒரு மந்திர சித்துவாக அவன் பெற்றானா இல்லை பயிற்சியினால் அடைந்திருப்பானா என்றெல்லாம் கேள்விகள் எழும்புகின்றன .

விக்கிரமாதித்தன் கதையை முழுவதுவாக அறிந்தவர்கள் அவன் அதை அன்னை காளியை யாசித்து பெற்றான் என்பர்.

இல்லை இல்லை அதெல்லாம் இடைச்செருகல்கள் .விக்ரமாதித்தன் அதை ஒரு பாடம் போலத்தான் கற்றிருக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து உண்டு.

மொத்தத்தில் கூடுவிட்டு கூடுபாயும் ஒரு சித்தி நமக்குள் பல சிந்தனைகளை தோற்றுவிப்பது மட்டும் நிச்சயம்.

இறந்த ஒரு உடலைத்தான் கூடு என்கிறோம் .அது இயங்கிக் கொண்டிருந்த வரை அதில் உயிர் என்று ஒன்று இருந்தது .

இதை ஆன்மா பிராணன் ஜீவன் என்று பல பெயர்களில் விளித்தாலும் பொருள் ஒன்றுதான் .இதுதான் உடலை அதனுள் இருந்த வரை ஆட்டி வைத்தது .இது விலகிய நிலையில் உடல் அப்படியே செயலற்று போய் விடுகிறது.

உண்மையில் உயிர் பிரிந்து விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்ய சுவாசம் அற்றுப் போவதைத்தான் கணக்கில் கொள்கிறோம் .

சுவாசம் அற்ற உடனேயே வெப்பமும் விலகி மற்ற பஞ்சபூதக் கலவை களான நீர் நிலம் ஆகிய சதை ஆகாயமாகிய மனம் என்று எல்லாமே செயலற்றுப் போய் விடுகிறது .உருமாறும் தொடங்கிவிடுகிறது.

என்றால் உடம்பை விட்டுப் பிரிந்த காட்சிதான் உயிராக இருந்ததா இதுதான் இன்னொரு உடலில் நுழைந்து அந்த உடம்பின் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது கேள்விகள் எழுகின்றன.

இந்த உலகின் சில விசித்திரமான முயற்சிகளை பலர் பல சமயங்களில் செய்திருக்கிறார்கள்.

இப்படி முடியாததெல்லாம் முயற்சி செய்வது மனித மனத்திற்கும் தேவையாக இருக்கிறது.

தினம் தினம் புதிது புதிதாக பல விஷயங்களை கண்டறிந்து வருகிறான்.

ஆனாலும் அவன் அணுவளவு கூட பெற்று பெற்றிராத சில விஷயங்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன.

எவ்வளவு முயன்றும் உடலின் திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு முதுவை உருவாவதை தடை செய்ய முடியவில்லை .

ஒரு தலைமுடி நரைப்பதைத் தடுக்க முடியவில்லை அதே போல மரணத்தையும் வெல்வதற்கு வழி தெரியவில்லை.

குளோனிங் என்கிற பெயரில் ஒரு மனிதனைப் போலவே அவரிலிருந்து அவரது திசுக்களை கொண்டு இன்னொரு மனிதனை உருவாக்க முடிந்திருக்கிறது ஆனாலும் எது உயிர் என்பதன் ரகசியம் விளங்கவே இல்லை.

எது உயிர்?

உடம்பில் நிலவும் உஷ்ணமா?

உள்ளே சென்று திரும்பும் காற்றா?.

இல்லை மொத்த உடல் எங்கும் பரவிக்கிடக்கும் தண்ணீரா?.

அதுவும் இல்லை. இவைகளால்தான் உயிர் வாழ்கிறோம் என்று நினைக்கும் மனம் (ஆகாயம் )எல்லாம் கலந்திருக்கும் நிலமாகிய உடலா?

You may also like...

Leave a Reply